பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 சிலப்பதிகாரத்தின் இறுதிக் காதையான வாழ்த்துக் காதையிலும் ஊழ்வினை வலியுறுத்தப்பட்டுள்ளது. பழ. வினை காரணமாகக் கணவனை யிழந்து துன்புற்றாள் கண்ணகி. அவளுடைய கண்ணிர் கொன்றதனால் உயிர் இழந்தான் பாண்டியன்; அவன் வாழ்க’ என்று ஆய மகளிர் வாழ்த்துகின்றனர். மேலும் ஊழ்வினையைத் தடுக்க முடியாது, அது அதன் பயனை ஊட்டியே தீரும்' என்னும் கருத்து சிலப்பதி காரம் முழுவதும் எதிரொலி செய்கின்றது. நாடுகாண் காதையில் சாரணர் வாயிலாக ஊழ்வினை வலியுறுத்தப் படுகிறது. ஊர்காண் காதையிலே கவுந்தியடிகளின் வாயுரையால் ஊழ்வினையின் திட்பம் உரைக்கப்படு கின்றது. கோவலன் மாதவியை விட்டுப் பிரியும்படி செய்தது ஊழ்வினை; அவன் மனைவியுடன் மதுரைக்குப் புறப்படும் படி செய்தது ஊழ்வினை; பாண்டிய வேந்தன் கோவலனைக் கொல்லும்படி ஆணையிட்டது ஊழ்வினை, ஊர்க் காவலர் களில் ஒருவனான கல்லாக் களிமகன் கோவலனை வாளால் வெட்டி வீழ்த்தியது ஊழ்வினை; கண்ணகி தன் கணவனை இழந்தது ஊழ்வினை; இவ்வாறு ஊழ்வினையின் செயல்களே சிலப்பதிகாரக் காதையினைத் தொடர்ந்து நடத்திச் செல்லக் காண்கிறோம். . முற்பிறப்பு மறுபிறப்பு நம்பிக்கை ஊழ்வினையில் நம்பிக்கைக் கொண்ட தமிழ் மக்கள் மறுபிறப்பையும் நம்பினார்கள். இப்பிறப்பிலே ஒருவர் துய்க்கும் இன்ப துன்பங்களுக்கு முற்பிறப்பில் செய்த வினையே காரணம் என்ற கருத்து அன்று தமிழரிடை நிலவியது. இப்பிறப்பில் நல்வினை ஆற்றுவோர் மறு பிறப்பில் இன்புறுவார்கள்; தீவினை செய்வோர் துன்புறு 42. சிலம்பு; நீர்ப்படைக்காதை : 49.51.