பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

417 வார்கள். ஊழ்வினையைப் பற்றிய இந்தக் கொள்கை மறுபிறப்பைப் பற்றிய கருத்தோடு ஒத்துவரக் காணலாம். மீண்டும் பிறவி எடுக்க வேண்டாம் என்றால் இப் பிறவியில் பற்றில்லாமல் வாழ வேண்டும்; பயன் கருதாமல் செயல்களைச் செய்யவேண்டும். திருவள்ளுவரும் இறைவன் திருவடியினை அடையாதாரே மீண்டும் மீண்டும் பிறவி யாகிய பெருங்கடலில் நீந்துவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பற்றற்றவனாகிய இறைவனைப் பற்ற வேண்டும். அப்போதே பிறவிக்குக் காரணமான பற்று அறும் என்றார். பற்று அறுமானால் வீடு பேறு வாய்க்கும் என்றார் நம்மாழ்வார். பிறப்பிலும் ஏழு பிறப்பினை உடன்படுகின்றார் திருவள்ளுவர். 48 சிலப்பதிகாரத்தும் மறுபிறவி பற்றிய நம்பிக்கை இடம் பெற்றிருக்கக் காணலாம். கணவன் பொருட்டுச் செய்யவேண்டிய ஒரு நோன் பினை முன்பிறவியிலே நீ செய்யவில்லை என்று கண்ணகியைப் பார்த்துத் தேவந்தி கூறும் கூற்றில் முற்பிறப்பு பற்றிய நம்பிக்கையினைக் காணலாம். கணவற்கு ஒரு நோன்பு பொய்த்தாய் பழம்பிறப்பில் அடுத்து, பிறப்பைத் தரும் பாசம் கவுந்தியை விட்டு ஒழிக’ என்று கவுந்தியைச் சாரணர் வாழ்த்தும் குறிப்பால் பிறவிகளில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை புலனா கின்றது. அடுத்து, ஏழு பிறப்பிலும் யாங்கள் உனக்கு அடிமை" (ஏழ் பிறப்படியேம்) என்று குறவர்கள் மலைவளங் கான வந்த செங்குட்டுவனிடம் கூறுகின்றனர். மேலும் மாடலன் செங்குட்டுவனுக்குப் பின்வருமாறு உயிரின் தன்மையினை எடுத்துரைத்தான்: 43. திருக்குறள்; கடவுள் வாழ்த்து; 8, 10 மற்றும் புதல்வரைப் பெறுதல் : 2. சே. செ. இ.27