பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 தெய்வப் பிறப்படைந்த ஒரு நல்ல உயிர் அதை விடத் தாழ்ந்த மக்கள் பிறவிக்குத் திரும்பினாலும் திரும்பும்; மனிதப் பிறவியை எடுத்த ஓர் உயிர் விலங்கின் பிறப்பை அடைந்தாலும் அடையும்; விலங்காகப் பிறந்த அவ்வுயிர் மிகுந்த துக்கத்துக்கு இடமான நரகர் பிறப்பை அடைந்தாலும் அடையும்; இவ்வுயிர் ஆடும் கூத்தர் போன்றது. ஒரு வழியிலே ஒரு கோலம் கொண்டு நிற்காது. தான் செய்கின்ற வினைக்குத் தகுந்த பிறப்பை அடையும். இது குற்றமற்ற அறிஞர்களின் உண்மை உரையாகும்.' மேலும் மாடலன், நல்லறம் புரிந்தோர் பொன் னுலகை அடைவது; ஒன்றிலே பற்றுக்கொண்டோர் அப்பற்றுள்ள இடத்திலே பிறப்பது; அறப்பாவங்களின் பயன் உடனே பலிப்பது; பிறந்தவர் இறப்பது; இறந்தவர் பிறப்பது; இவைகள் எல்லாம் புதியன அல்ல; பழமை யானவை" என்று குறிப்பிடுகின்றான். மாடலனின் இக் கூற்று மறுபிறப்பு உண்டு என்பதை உணர்த்துவதாகும். :பழம் பிறப்பை உணர்வோர் ஆவார்' (பண்டைப் பிறவியர் ஆகுவர்); ஒளித்திருக்கும் பழம் பிறப்பை உணர்ந்தோர் ஆவார் (ஒளித்த பிறப்பினர் ஆகுவர்) இவை தேவந்தியின் கூற்று. பழம் பிறப்பு உணர்ச்சிநினைவு-வந்து சேர்ந்தது (ஒளித்த பிறப்புவந்து உற்றது) இது பழம் பிறப்பை உணர்ந்த சிறுமியரைப் பற்றிச் சொல்லியதாகும். மேலும், மதுராபதித் தெய்வம் கோவலன் முற் பிறப்பைப் பற்றிய கதையினைக் கூறுகின்றது. ஒரு கையைக் குரங்கின் கையாகக் கொண்ட தெய்வ குமாரனைப் பற்றிக் கூறும் கதை முதலியன மறுபிறப்பை வலியுறுத்தும் கதைகளாகும்.

கோவலன் தாயும், கண்ணகியின் தாயும் கோவலன் அடைந்த கொடுந்துயர் கேட்டு மாண்டனர். அவர்கள் கண்ணகியிடம் கொண்ட அன்பால், வஞ்சிமா நகரில்