பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419 அரட்டன் செட்டியின் மனைவியின் வயிற்றிலே பெண் களாகப் பிறந்தனர். கண்ணகியின்பால் அன்பு கொண்ட இடைச்சியாகிய மாதரி திருமாலிடம் பற்றுக் கொண்டு குரவைக்கூத்து நிகழ்த்தினாள். ஆதலால் அவள் திருவனந்தபுரத்திலே திருமாலுக்குப் பணி செய்யும் சேடக்குடும்பியின் மகளாகப் பிறந்தாள்.' சிலப்பதிகாரம் கூறும் மேற்கண்ட செய்திகள் மறு பிறப்பு பற்றிய நம்பிக்கை அந்நாளில் மக்களிடையே நிலவியதனை விளங்க எடுத்துரைக்கின்றன. கனவில் நம்பிக்கை மூன்று கனவுகள் சிலப்பதிகாரத்தில் பேசப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீய நிகழ்ச்சியையும் முன்கூட்டியே கனவு சிலருக்கு அறிவித்துவிடும் என நம்பினர். கோவலன், கண்ணகியைத் திரும்ப வந்து அடைவதற்கு முன்பு, புகார் நகரில் தன் வீட்டில் கண்ணகி ஒரு தீய கனவு கண்டாள். கோவலன் திரும்பிவந்து கண்ணகியின் கையைப் பற்றினான். இருவரும் புகார்நகரைக் கடந்து வேறொரு பெரும்பதியை அடைந்தனர். அப்பதியிலிருந்தோர் பொய்த் தேளிடுவது போலக் கண்ணகி மீது ஒரு பெரும் பழியைச் சுமத்தினர். கோவலனுக்கு அதனால் பெருந்தீங்கு ஒன்று உண்டாயிற்று. அதுகேட்ட கண்ணகி அவ்வூர் மன்னன் முன்பு உண்மையைக் கூறி முறையிட்டாள். நீதி வேண்டினாள். உடனே அவ்வரசனுக்கும் ஊருக்கும் பெருந்தீங்கொன்று விளைந்தது. இதுவே கண்ணகி கண்ட கனவாகும். இரண்டாவது நாம் காணும் கனவு கோவலன் கண்ட திக்கனவாகும். மதுரையின் புறத்தே தங்கியிருந்த கோவலன் தான் கண்ட கனவினைக் கவுந்தி அடிகளிடம் 44. சிலம்பு; கனாத்திற்முரைத்த காதை : 45-54.