பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 பின் வருமாறு அறிவித்தான். மதுரையில் கடைக்குணத் தோன் ஒருவனால் கண்ணகி கண்டோர் உள்ளம் பதைக்கத் தக்க ஒரு பெரும் துன்பமெய்தினாள். கோவலன் உடுத்தி யிருந்த ஆடையைப் பிறர் பறித்தனர்; கோவலன் ஒரு எருமைக்கடாவின் மீதேறிக் கண்ணகியுடன் வீட்டுலகை நண்ணினான். மாதவி, மணிமேகலையைப் போதி அறவோன் முன்பு அளித்தாள்'. இவ்வாறாகக் கோவலன் தன் கனவினைக் கவுந்திக்குக் கூறினான்.49 மூன்றாவதாக இடம் பெற்றுள்ள கனவினைக் கண்டவள் பாண்டிமாதேவி ஆவள். பாண்டியன் இறப் பதற்கு முன் ஒரு தீ நிமித்தம் போன்று இத்தீக்கனவினைக் கண்டாள் அவள். பாண்டியனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் நி ல த் தி ல் விழுந்தன. அரண்மனை வாயிலில் தொங்கிக் கிடந்த ஆராய்ச்சி மணியின் குரல் நடுங்கியது; திக்கெட்டும் அதிர்ந்தன; பகற் பொழுதிலேயே கதிரவனை இருள் விழுங்கியது: இரவில் வானவில் தோன்றியது; பகற்போதில் விண்ணி னின்றும் மீன்கள் விழுந்தன. பாண்டிமாதேவி கண்ட தீக்கனாவாகும் இது. . இம்மூன்று கனவுகளும் பின் விளையப் போகும். நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சுட்டியமை நன்கு அறியப் படும். சகுனத்தில் நம்பிக்கை கனாக்களேயன்றிச் சகுனங்களிலும் அக்கால மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். பெண்களுக்கு இடக்கண் துடிப்பது நல்ல சகுனமாகவும் வலக்கண் துடிப்பது தீய சகுனமாகவும் கருதப்பட்டன. இந்திர விழாவின் இறுதிநாளில் கண்ணகியின் இடக்கண் துடித்தது. _ 45. சிலம்பு; அடைக் கலக் காதை : 95.106. - o 46. ג ת வழக்குரை காதை : 1-12.