பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421 கண்ணகி கோவலனை விரைவில் அடைவாள் என்பதற்கு அறிகுறியாக இருந்தது. கோவலன் மாதவியைப் பிரிவான் என்பதற்கு அறிகுறியாக மாதவியின் வலக்கண் துடித்த தாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். ஆயர்கள் ஒரு செயலை மேற்கொண்டு தெரு வழியே செல்லும்பொழுது இமிலேறு ஒன்று எதிர் வந்தால் அதனைத் தீய சகுனமாகக் கருதினர் என்பதனை இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். கோவலன் சிலம்பை விற்கச் செல்லும்பொழுது மாதரி மனையைத் தாண்டிய அளவில் இமிலேறு ஒன்று எதிரில் வந்தது. அதனை அவன் ஆயர் குலத்தவன் அல்லாத காரணத்தால் தீய சகுனம் என்று அறியாது மேலே சென்றான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோவலன் கொலையுண்டான் என்ற செய்தியினை மாதரியோடு வாழ்ந்த ஆய்ச்சியர் சில நிமித்தங்களால் முன் கூட்டியே அறிந்தனர். ஆய்ச்சியர் சேரியில் குடத்துப் பால் உறையவில்லை. குவியிமிலையுடைய ஏ று க ள் கண்ணிர் சொரிந்தன. உறியிலிருந்த வெண்ணெய் உருக வில்லை. மறிகள் முடங்கி ஆடவில்லை. அவற்றின் கழுத்தில் கட்டிய மணிகள் அறுந்து நிலத்தில் விழுந்தன. இவற்றால் எல்லாம் அக்காலத்தில் சகுனத்தில் மக்கள் கொண்டிருந்த பெரும் நம்பிக்கையைத் தெள்ளிதின் உணரலாம். 4.7 o நல்ல நாளில் நம்பிக்கை வினைகளை மேற்கொள்ளும் பொழுது அவ்வினையில் வெற்றி பெற நல்ல நாள்களைப் பார்த்துத் தொடங்குவது 47. சிலம்பு; இந்திரவிழவூரெடுத்த காதை : 237.239; கொலைக்களக்காதை : 98-101 மற்றும் ஆய்ச்சியர் குரவை : 5.