பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 என்பது அக்கால மரபாகும். கோவலன் க ண் ண கி திருமணம் சந்திரன் உரோகிணியைச் சேர்ந்த நல்லோ ரையில் நடைபெற்றது. அது போன்றே செங்குட்டுவன் வடநாட்டுச் செலவைத் தொடங்குதற்குரிய நன்முழுத்தத் தினை அரண்மனைப் புரோகிதர் அறிவித்த அளவிலே செங்குட்டுவன் உடனே பு ற ப் ப ட இயலாமையால் செங்குட்டுவன் வடதிசை நோக்கித் தன் குடைகளைப் புற வீடு விடுத்தான்.49 சாபத்தில் நம்பிக்கை சாபத்திலும் அF Tப விமோசனத்திலும் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். மதுரை வழிநடைச் செல வின்போது கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி குறித்து வறுமொழியாளனும் வம்பப்பரத்தையும் பொருந்தா உரை புகன்றபோது கவுந்தியடிகள் சினமுற்று அவர்கள் உறையூர் காட்டில் நரிகளாகுக!' எனச் சபித்தார். 59 சபித்ததும் நரிகள் ஊளையிடும் ஒலியினைக் கண்ணகியும் கோவலனும் கேட்டனர். அவர்கள் அறியாமையால் செய்த பிழையைப் பொறுத்து அவர்களுக்குச் சாப விமோசனம் வேண்டினர். கவுந்தியடிகளும் சாப விமோ சனம் வழங்கினர். அடுத்து, மதுரை மாநகரம் குறிப்பிட்ட இந்த நாளில் அழியவேண்டும் என்று அந்நகர் க்கு முன்பே ஒரு சாபம் உண்டென்பதை மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குத் தெரிவித்தது. மேலும் கண்ணகி இப்பிறவியில் உழந்த துன்பத்திற்குக் காரணம் முற்பிறவியில் நீலி என்பாள் இட்ட சாபம் காரணமேயாகும் என்பதும் சிலப்பதி 48. சிலம்பு; மங்கல வாழ்த்துப் பாடல் : 50-51. 49. ג כ கால்கோட் காதை : 44-45. 50. 5 நாடுகாண் காதை : 231-245. 51. 3. வஞ்சின மாலை : 49-52.