பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423 காரத்தில் குறிக்கப் பெற்றுள்ளன. இவற்றால் சாபம் முதலியவற்றில் அக்கால மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை புலனாகின்றது. ஆடை அணிகள் பெண்கள் தூய மெல்லிய ஆடைகளை உடுத்தினர்; கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டி நறுமணம் பொருந்திய பூக்களைச் சூட்டினர்; நெற்றியில் திலகமிட்டுக் கொண் டனர்; கண்களில் அஞ்சனம் தீட்டினர்; காதில் குழை அணிந்தனர். மார்பில் சந்தனம் முத்துவடம் முதலிய வற்றை அணிந்தனர்; தோள்களிலும் மா ர் பி லு ம் தொய்யில் எழுதினர்; இடையில் மேகலை அணிந்திருந் தனர்; கால்களில் சிலம்பு அணிந்திருந்தனர். * வாணிபம் புகார், மதுரை முதலிய பெரு நகரங்களில் பல்வேறு மக்கள் பல்வேறு தொழில்களை மேற்கொண்டிருந்தனர். ஒவ்வொரு தொழில் ஆற்றுவோருக்கும் தனித் தனித் தெருக்கள் அமைந்திருந்தன. அவர்களுக்குப் பெயர்களும் தெருக்களுக்குப் பெயர்களும் அவர்கள் மேற்கொண்ட தொழில்களை ஒட்டியே அமைந்திருந்தன. கலைகள் தமிழ் மக்கள் இசைக்கலையையும் நாட்டியக்கலையை யும் மிகவும் உயரிய நிலையில் அந்நாளில் வளர்த்துச் சிறந் திருந்தனர். ஐவகை நிலமக்களும் கூத்துக்கள் வழியே கடவுளைப் பரவி நின்றனர். விறலியர் நாட்டியக்கலையை நயமுற வளர்க்க, பாணரோ இசைக்கலையைச் சீர்மை பெற வளர்த்தனர். நாட்டியக்கலையைக் குலமகளிர் அன்றி விலைமகளிரே பயின்றதாகச் சிலப்பதிகாரத்தால் 52. சிலம்பு; கட்டுரை காதை : 149-178. 53. ,, கடலாடு காதை : 76.108.