பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 அறியக்கிடக்கின்றது. புகாரிலும் மதுரையிலும் தனித் தெருக்களில் இவர்கள் வாழ்ந்தனர். இவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர். ஆடையணிகலன்களில் அமை வுறத் திகழ்ந்தனர். ஆடல் மகள் மாதவி பதினாறுவகை ஒமாலிகைகளால் தன்னை அலங்கரித்துக் கொண்ட செய்தி யும் மதுரைப் பரத்தையர் இனிய நீர் விளையாட்டிலும் பொழில் விளையாட்டிலும் காலத்தைப் போக்குகின்ற நிகழ்ச்சிகளும் இவர்கள் ஆடம்பர வாழ்வில் அணிபெறத் திகழ்ந்த நிலையினை உணர்த்தும். பரத்தையர் பெண்கள் ஐந்தாவது வயது தொடங்கிப் பன்னிரண்டாவது வயதுவரை ஏழு ஆண்டுகள் நாட்டியக்கலையை நலமுறப் பயின்றனர். பன்னிரண்டாம் வயதில் அரசன் முன்னிலையில் பெரிய நாட்டிய அரங்கில் அரங்கேற்றம் நிகழும். நாட்டியத்திற்குக் குழலாசிரியன், யாழாசிரியன் முதலியோர் அரங்கில் அமர்ந்து துணை செய்வர். இவ்வாசிரியருடைய இலக்கணங் களெல்லாம் அரங்கேற்றுக் காதையில் ஆசிரியர் இளங்கோ வடிகளால் அணிபெறக் கிளத்தப்பட்டுள்ளது. ஒருமுக எழினி, பொருந்துவரல் எழினி, கரந்துவரல் எழினி என்று மூ வ ைக ப் ப ட் ட திரைச்சீலைகள் பேசப்பட்டுள்ளன. ஆடரங்கில் தூண்நிழல் விழாவண்ணம் பெருவிளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. நாட்டிய அரங்கின் அமைப்பும் விளங்க உரைக்கப்பட்டுள்ளது. நாட்டியமாட அரங்கில் ஏறும்போது வலக்காலை முன்வைத்து ஏறவேண்டும் என்பது அக்கால நியதி. கலைகள் அரசன் முன்னிலையில் நடிப்பன (வேத்தியல்), பொதுமக்கள் முன்னிலையில் நடிப்பன (பொது வியல்) என இருவகைப்பட்டன. நாட்டியம் முடிந்ததும் மன்னன் நாட்டிய நங்கையின் தகுதிக்கேற்பப் பட்டமும் பரிசும் வழங்குவது மரபு. மாதவி பதினோரு ஆடல்களை நன்கு கைவரப் பெற்றிருந்தாள் என்பது சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கும் செய்தியாகும். யாழைக் கொண்டு பாட்டிசைத்தனர் என்பது கானல்வரி யால் அறியலாகும். இசைப் பாணர் பாட்டிசைக்கும்