பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425 செய்தியும் இனிதே கிளத்தப்பட்டுள்ளது. பொதுவாக, சிலப்பதிகாரத்தி ன் பலவிடங்களிலும் இசையும் கூத்தும் பற்றிய செய்திகள் இனிமையுறக் கிளத்தப்பட்டுள்ளன. செங்குட்டுவன் வடநாட்டுப் பயணத்தின்போது அவனுடன் நாட்டிய மடந்தையர் பலர் சென்ற செய்தி ஈண்டு மனங் கொளத் தக்கது. இதுகாறும் கூறியவற்றால் சிலப்பதிகாரம் காட்டும் அக்காலச் சமுதாய வாழ்க்கை ஒருவாறு உரைக்கப்பட்டது காணலாம். அச்சமுதாய வாழ்வு நலமும் வளமும் வாழ்வும் வகையுறப் பெற்று மிளிர்ந்தது என்பதனை அங்கைநெல்லிக் கனி என நமக்குச் சிலப்பதிகாரம் உணர்த்தி நிற்கின்றது. கடவுள் நம்பிக்கை சிலப்பதிகார காலத்தில் தமிழ்மக்கள் பல பெருந் தெய்வங்களையும் பல சிறு தெய்வங்களையும் போற்றி வணங்கி வந்தனர். தெய்வங்களுக்கு தினந்தோறும் பூசை களும் அடிக்கடி திருவிழாக்களும் நடந்தன. மருதநிலத் தெய்வம் இந்திரன் தமிழ்மக்களால் தெய்வ மாகப் போற்றப்பட்டான். வளம் நிறைந்த ஊர்களில் எல்லாம் இந்திரனுக்குக் கோயில்கள் இருந்தன. சித்திரைத் திங்களில் நிறைநிலா நாள் அன்று இந்திரவிழா தொடங் கியது. தொடர்ந்து 28 நாள்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. இந்திர விழவூரெடுத்த காதை இந்திரவிழாவின் நடை முறையினை விளங்கக் கூறுகிறது. முல்லைநிலத் தெய்வமான மாயோன் கண்ணனாக ஆயர்பாடியில் அவதரித்தான். கண்ணனின் சரிதம் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் விரிவாகக் காணலாம். ஆய்ச்சியர் கு ர ைவ யி ல் திருமாலின் அவதாரங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன. கண்ணனின் பாலலீலைகளும் மற்றச் செயல்களும் விரிவாகக் கூறப்