பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 பட்டுள்ளன. தேவர்கள் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கித் திருமால் உதவியுடன் பாற்கடலைக்கடைந்த செயல் குறிக்கப்பட்டுள்ளது. பின்னர், திருமால் வாமனாவ தாரம் எடுத்ததையும் மாவலிபால் மண் பெற்றுத் திருவிக்கிரம அவதாரமாகத் திகழ்ந்ததையும் ஆய்ச்சியர் பாடும் பாடல் ஒன்று குறிப்பிடுகின்றது. பிறிதொரு பாடல் மூவுலகையும் தன் இரண்டடியால் அளந்து அந்தச் சிவந்த பாதங்கள் ேம லு ம் சிவக்கத் தன் தம்பியாகிய இலக்குவனோடு காட்டிற்குச் சென்று மதில்காவலிற் சிறந்த பழமை சான்ற இலங்கை மாநகரை வென்ற ஒப்பற்ற பெரிய வீரனாகிய இராமபிரானின் பெருமையைக் கேட்கும் செவிகளே செவிகள், திருமாலின் பெருமை கேளாத செவிகள் செவிகளல்ல என்று குறிப்பிடுகிறது. இப் பாட்டில் திருவிக்கிரம அவதாரமும் இராமாவதாரமும் குறிப்பிடப்படுகின்றன.

பெரிய கோயில் என்று வைணவர்களால் பெரிதும் பாராட்டப்படும் திருவரங்கம் சிலப்பதிகாரத்தில் குறிக்கப் பட்டுள்ளது. அலைநிறைந்த காவிரியின் இடையில் அமைந் துள்ள திருவரங்கத்தில் நீலமேகம் ஒன்று பொற்குன்றம் ஒன்றின்மேல் அடைத்துப் படுத்திருப்பதுபோல, திருமால் பொன்னிற உருவுள்ள ஆயிரம் தலைகளை யுடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையிலே பலரும் தொழு தேத்தப் பள்ளிகொண்டுள்ளார்' என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அடுத்து திருவேங்கடத்தில் எழிலார்ந்த, நின்ற திருக்கோலத்தோடு காட்சி தரும் திருமால் பின்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளார். .

வேங்கடமலையிலே சிறந்த அருவி உண்டு. அந்த மலையின் உச்சியிலே, சூரியனும் சந்திரனும், இருபுறமும் உயர்ந்து காணப்படும் நடு இடம் ஒன்றுண்டு. அந்த 54. சிலம்பு காடுகாண் காதை :35-40. 55. 5 : 41-51 : גג.