பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427 இடத்திலே, திருமால் சங்கு சக்கரங்களை முறையே வலக்கரத்திலும், இடக்கரத்திலும் ஏந்தி நிற்கின்றார். அழகிய ஆரத்தை மார்பிலே பூண்டிருக்கின்றார்; பொன்னாடையை உடுத்தியிருக்கின்றார். இவ்வாறு, செந்தாமரைக் கண்ணனாகிய திருமால் நின்ற கோலத்திலே காட்சியளிக்கின்றார். இத்தோற்றம், நல்ல நீலநிறமுள்ள மேகம் ஒன்று, தன் மின்னலாகிய புத்தாடையணிந்து, தன் ஒளியாகிய அணிகலம் பூண்டு, நின்று காட்சி தருவதைப் போல் காணப்படுகிறது. ” 'திருமால் குன்றம்' என்ற பெயரால் அழகர்மலை கூறப்படுகிறது. அதன் பெருமை, அதிலுள்ள சிலம்பாறு, புண் ணிய சரவணம், பவ காரணி, இட்டசித்தி என்னும் தீர்த்தங்களின் மகிமை முதலியனவெல்லாம் காடுகாண் காதை யில் விளங்கப் பேசப்படுகின்றன. திருமாலைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் இன்னும் பலவிடங் களில் வந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் பலதேவனும் தெய்வமாகப் போற்றப்பட்டான். ! ?

குறிஞ்சிநிலத் தெய்வமான முருகன் சிலப்பதிகா ரத்தில் குன்றக்குரவை யில் சிறக்கப் போற்றப்பட்டுள் ளான். முருகன் சரவணப் பொய்கையிலே தாமரைப் பள்ளியிலே கார்த்தி கைப் பெண்கள் அறுவராலும் பால் கொடுத்து வளர்க்கப்பட்டான்' என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. ஆறுமுகங்களையும் பன்னிரு கைகளை யும் கையினில் வேலினையும் கொண்டு மயிலின் மீது அமர்ந்து அசுரர்களை அழித்து தேவர்களின் துயரைத் துடைத்து தேவர்தலைவர் இந்திரன் வணங்கும் படி முருகன் நின்றான் என்று பிறிதோரிடத்திலே சுட்டப்பட்டுள்ள து.

பழமையான கடலினுள் புகுந்து மாமரவடிவில் நின்ற சூரபதுமனை ஒளிவிடும் தன் கை வேலாலே கொன்ற கதை 56 . சிலம்பு; இந்திரவிழவூரெடுத்த காதை : 136-139. 57. - i. a. 5 * 171.