பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 இடம்பெற்றுள்ளது. முருகன் கிரெளஞ்ச மலையைப் பிளந்த செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது. ஆலமரத்தின்கீழ் அமர்ந்து விளங்கும் செல்வராகிய பரமசிவன், கைலை மலையின் மன்னனாகிய பருவதராசனின் மகளாகிய பார்வதி ஆகிய இவர்களின் புதல்வன் என்று குறிக்கப்படு கின்றான். அடுத்து, குன்றுவாழ் குறவர்கள் மயிலின்மேல் வள்ளியம்மையுடன் சிவபெருமான் புதல்வன் வருவான் என்பர். குறவர்தம் குலமகளாம் குறமகளாகிய வள்ளி யுடன் காணப்படும் ஆறுமுகங்களையுடைய ஒப்பற்றவனே! உனது இரண்டு அடிகளையும் பணிகின்றோம் என்று குறவர்கள் முருகனை வழுத்துகின்றனர். இங்கே வள்ளியை மட்டும்தான் முருகன் மனைவி என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு மனைவியாகிய தெய்வயானையைப் பற்றிய குறிப்பு, குன்றக்குரவையிலே காணப்படவில்லை. திருச் செந்தூர், திருச்செங்கோடு, வெண்குன்றம், ஏரகம் முதலிய திருத்தலங்கள் முருகன் உறையும் இடங்களாகக் கூறப் பட்டுள்ளன. சிவபெருமானைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. பரமசிவன் பிறைச் சந்திரனையும் மலர் மாலையையும் முடியில் அணிந்தவன். கருக்கான முனையையுடைய சூலாயுதத்தை ஏந்தியவன்' என்று சிவபெருமான் தோற்றம் குறிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உண்டு. தேவர்களுக் காக நஞ்சுண்டு நீலகண்டன் ஆனான். வாசுகியை நாணாக வும், இமயத்தை வில்லாகவும் கொண்டு திரிபுரத்தை எரித் தான்; யானைத் தோலைப் போர்த்தியவன்: புலித்தோலை உடுத்தியவன்; கொன்றைப் பூமாலையைத் தரித்தவன்' என்ற செய்திகளெல்லாம் வேட்டுவவரி யிலே இடம்பெற் றுள்ளன. உமையம்மையை ஒரு பக்கமாகக் கொண்டு சிவபெருமான் ஆடிய கொடு கொட்டி என்னும் நடனம் கடலாடு காதை"யில் குறிக்கப்பட்டுள்ளது. உமாதேவியைத்