பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429 தன் ஒரு பாகமாகக் கொண்டவன் முனிவர்கள் உறையும் இமயமலையில் வீற்றிருக்கும் தெய்வம் என்று நடுகற். காதை"யிலே சிவபெருமான் குறிக்கப்பெற்றுள்ளான். சிவ மூர்த்தங்களில் ஒன்றாகிய தட்சணாமூர்த்தி' என்னும் பெயர் சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் வழங்கியிருந்தது. 8 சங்க இலக்கியங்களில் இப்பெயர் காணப்படவில்லை. கட்டுரை காதை யில் 'சிறந்த வார்த்திகன் என்பவன் மகன், கல்லால மரத்தின் கீழிருந்து நால்வர்க்கு உபதேசித்த சிவபெருமான் பெயர் கொண்டு வளர்ந்தவன். அத்தகைய வார்த்திகனுடைய புதல்வன் பெயர் தக்கினன் என்பது : என்ற குறிப்புக் காணப்படுகின்றது. செங்குட்டுவன் வடநாடு சென்றபோதும் பிறைசூடிய பெம்மானின் திருக் கோயில் சென்று முதற்கண் தொழுத செய்தி குறிப்பிடப் படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் இருந்த கோயில்களைக் குறிப்பிடும்பொழுது, சிவபெருமான் கோயில்களையே சிலப்பதிகாரம் முதன்மையாகக் குறிப்பிடு. கிறது. இதனால் சிலப்பதிகாரத்தின்வழி, தமிழ் நாட்டில் சிவவழிபாடு சிறந்திருந்தது என்பதனை அறியலாம். அருகக்கடவுள் வழிபாடும் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகின்றது. அருகமதத் தத்துவங்கள் சாரணர் களால் தமிழ் மக்களுக்கு உபதேசிக்கப்பட்டன. இவ்வாறே புத்தமதத் தத்துவங்களும் போற்றப்பட்டன. கவுந்தியடி கள் சிலப்பதிகாரத்தில் அருக சமயத் தத்துவங்களை விளங்க எடுத்துரைக்கின்றார். காவிரிப்பூம்பட்டினம், மதுரை முதலிய இடங்களிலும் வேறுபல இடங்களிலும் புத்தர்பள்ளிகளும் அருகர்பள்ளிகளும் இருந்தன. சிலப்பதி காரத்தில் அருகரும் புத்தரும் தமிழ்மக்களால் போற்றப் பட்ட செய்தியினை அறியலாம். 58. சிலம்பு; கட்டுரை காதை : 91 மற்றும் குன்றக் குரவை : 13-14. 59. ג. ג இந்திரவிழவூரெடுத்த காதை : 180