பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 காப்பாக அமைந்திருந்தது. இவர்களை அடக்கப் பல் யானைச் செல்கெழு குட்டுவன் யானைப் படை நடத்திச் சென்று, குறும்பு செய்த குறுநிலத் தலைவர்களை எளிதில் வென்று அவர்கள் பணிந்து திறை தரத் தன்னாடு திரும் பினான். உம்பற்காடு சேரவேந்தரின் ஆணைக்கும் ஆட்சிக்கும் உட்படுவதாயிற்று. முதியர் இப்போரில் குட்டுவனுக்குத் துணை நின்றனர். உம்பற்காட்டு வெற்றி யுடன் அமையாது, குட்டுவன் மேலும் படை நடத்திச் சென்று அகப்பா என்னும் அரணைக் கைப்பற்றி, அதனைச் சுற்றியுள்ள ஊர்களைத் தீக்கிரையாக்கிப் பின்னர் அப்பகுதியினை முதியர் காவலின் கீழ் வைத்துத் தன் அரசவாணையை அப்பகுதியிலும் நிறுவிவிட்டுத் தன் தலை நகர் திரும்பினார். இச்செய்தியினையே, மூன்றாம் பத்தின் பதிகம், உம்பற் காட்டைத் தன்கோல் கிறீஇ அகப்பா எறிந்து பகற்றீ வேட்டு மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து என்று குறிப்பிடுகின்றது. துஞ்சுமரங் துவன்றிய மலரகன் பறந்தலை ஓங்குநிலை வாயிற் று.ாங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக் கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதில் நிறைப் பதணெத்து அண்ணலம் பெருங்கோட்டு அகப்பா வெறிந்த பொன்புனை புழிஞை வெல்போர்க் குட்டுவ - மூன்றாம் பத்து; 2:21-27. என்று பதிற்றுப்பத்து இவனுடைய அகப்பா எறிந்த வெற்றியைக் குறிப்பிடுகின்றது. இவன் கொங்குநாட்டுப் பகுதிகள் சிலவற்றையும் வென்றான் என்பது,