பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 சிறு தெய்வங்கள் சிலப்பதிகாரத்தில் பல சிறு தெய்வங்கள் குறிக்கப்படு கின்றன. அவைகளைத் தமிழர்கள் பல முறைகளில் வனங் கினர். அவைகளுக்கு விழாச் செய்து கொண்டாடி மகிழ்ந் தனர். இந்திரவணக்கம், ஐயை வணக்கம், திருமால் வணக்கம், சிவபெருமான் வழிபாடு, முருகன் வணக்கம், அருகர் வணக்கம், புத்தர் வணக்கம் இவைகள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தன. ஆனால் விநாயகர் வணக்கம் மட்டும் சிலப்பதிகாரத்தில் காணப்படவில்லை. நெய்தல் நில மக்களுக்கு வருணன் தெய்வமென்று தொல்காப்பியனார் குறிப்பிடுவர். சிலப்பதிகாரத்தில் தமிழ் மக்களிடத்தில் வருணனை வழிபடும் வழக்கம் குறைந்து விட்டது. அல்லது மறைந்துவிட்டது என்று எண்ண இட மேற்படுகின்றது. பத்துப்பாட்டுள் ஒன்றான பட்டினப் பாலையிலே பரதவர்கள் கடற்கரையிலே சுறாமீன் எலும்பை நட்டு அதற்குப் பூசை செய்தனர் என்ற செய்தி காணப்படுகின்றது. இது வருணன் என்னும் நெய்தல் நில தெய்வத்தைப் பரதவர்கள் வணங்கும் பண்டைக்கால முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் இவ்வழிபாடு சிலப் பதிகாரத்தில் காணப்படவில்லை. ஐயை பாலைநிலத்தின் தெய்வம். வேட்டுவ மக்கள் பாய்கலைப்பாவை, கொற்றவை, அமரி, குமரி, கெளரி, சமரி, சூளி, நீலி, சங்கரி, அந்தரி முதலிய பல பெயர்களால் வழங்கும் இத் தெய்வத்தை வழிபட்டனர். காளி, துர்க்கை என்ற பெயர்களும் இத்தெய்வத்தைக் குறிக்கும். வேட்டு வர்கள் இத்தெய்வத்திற்குப் பலியிட்டுப் போற்றுவார்கள். ஐயை சிவபெருமான் வடிவாகவும் திருமால் உருவாகவும் போற்றப்படுகின்றாள். அவளுடைய திருவிளையாடல் நிகழ்ச்சியும் வேடர்கள் வணங்கும் முறையும் வேட்டுவவரி" .யிலே விரிவாகக் கூறப்பட்டுள்ளன. டிரி