பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

431 மோகினிப் பிசாசு என்று ஒரு தெய்வத்தைக் குறிப் பிடுவர். இத்தெய்வம் அழகான பெண்வடிவில் வந்து ஆண்களை மயக்குமாம். கடத்தற்கரிய வழியிலே மிகுந்த துன்பத்தைத் தரும் இத்தெய்வம் அச்சம் விளைக்காத நய மான முறையிலே வழிப்போவோரைத் தடுக்கும். இத் தெய்வம் ஆரஞர்த் தெய்வம்', கானுறை தெய்வம்' என்ற பெயர்களால் லப்பதிகாரத்தில் சொல்லப் பட்டுள்ளது.80 வனதேவதை' என்றும் இதைக் கூறுவர். புகார் நகரக் கோயில்கள் சிலப்பதிகார காலத்திலே தமிழகத்திலே Լ1 GՆ) கோயில்கள் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர னுக்குத் தனிக் கோயில் இருந்தது. இந்திரன் படையான வச்சிராயுதம் நிற்கும் கோயில், அவன் வாகனமாகிய ஐராவதம் என்னும் யானை நிற்கும் கோயில், கற்பகத்தரு நிற்கும் கோயில் இவைகள் தனித்தனியே இருந்தன. வச்சிரக் கோட்டத்திலிருந்த முரசை ஐராவதம் நிற்கும் கோட்டத்திற்குக் கொண்டு வந்தனர்; யானையின் மீது ஏற்றினர்; இந்திரவிழாவின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவித்தனர். கற்பகத்தரு கோட்டத்தி லிருந்த கொடியை வானிலே பறக்கும்படி ஏற்றினர். இவ் வாறு இந்திரவிழாவின் கொடியேற்றுவிழா குறிக்கப் பட்டுள்ளது. பிறவாத உடம்பினையுடைய பெரியோனாம் சிவன் கோயிலும், ஆறுமுகத்தினையுடைய செவ்வேளாம் முருகன் கோயிலும், வெள்ளைநிற மேனியையுடைய துரியோனாம் பலதேவன் கோயிலும், நீலமேனியையுடைய திருமால் கோயிலும் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தன. அருகர் கோயிலுக்குப் புறநிலைக்கோட்டம்' என்பது பெயர். அக்கோயில் பூரீகோயில் எனப்படும். காவிரிப்பூம் 60. சிலம்பு; காடுகாண் காதை . 109-124. மற்றும் ஊர்காண் காதை : 1.1.