பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 பட்டினத்தில் இக்கோயில் இருந்தது. அருகர் பள்ளிகளும் புத்தர் பள்ளிகளும் இருந்தன. தருமங்களைப் போதிக்கும் வேறு இடங்களும் இருந்தன. நாடுகாண்காதை யில் புத்த விகாரங்கள் அருகர்க்குரிய சிலா தலங்கள் முதலியன பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. ஐந்து கிளைகள் பொருந்திய மகாபோதி மரத்தின் கீழே ஞானம் பெற்றவர் புத்தர். அவருடைய அறவுரைகளைப் போதிக்கும் அந்தர சாரிகள் வந்த மர்ந்து புத்ததருமங்களைப் போதிப்பார்கள். இத்தகைய இந்திரவிகாரம் ஏழினையும் கோவலன் வணங் கினான் என வருகின்ற குறிப்பால் காவிரிப்பூம்பட்டினத்தில் பெளத்த மதப் பள்ளிகள் இருந்தன என்பதை அறியலாம். பெளத்தப் பள்ளிகளை வணங்கிய கோவலன் பின் அருகர்களின் சிலா தலத்தையும் வணங்கினான். அழகு. மிகுந்த மலர்களையுடைய பிண்டியின் நிழலிலே சாரணர்கள் அமரும் சிலா தலம் இருந்தது. அது நீராட்டு விழாவின் போதும் பெரிய தேர்விழாவின்போதும் சாரணர்கள் வந்து மக்களுக்கு அருக தருமத்தை உபதேசிப்பார்கள் என்று கருதி சாவகர்களால் இடப்பட்டதாகும். இதனையும் கோவலன் தொழுது வலம் வந்தான்." சாவகர் என்போர் அருக தருமத்தைப் பின்பற்றி: நடக்கும் இல்லறத்தார். உலகநோன் பிகள் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். புகார் நகரில் அருகர் பள்ளிகளும் இருந்தன என்பதனை இச் செய்தியால் அறியலாம். கற்பகத்தரு கோயில், ஐராவதக் கோயில், பலதேவன் கோயில், சூரியன் கோயில், கைலாயக்கோயில், முருகன் கோயில், இந்திரன் கோயில், அருகன் கோயில், சந்திரன் கோயில் முதலிய கோயில்கள் கனாத்திறமுரைத்த காதை யில் குறிக்கப்பட்டுள்ளன. :அழகிய பாம்புப் படுக்கையிலே யோக நித்திரை செய்துகொண்டிருக்கும். நீலமணிபோன்ற நிறத்தையுடைய திருமால் கோயிலை