பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

433 வலம்செய்து நீங்கிக் கோவலன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டான்' ' என வரும் குறிப்பால் புகார் நகரில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் இருந்தது என்பதை அறியலாம். o மதுரை நகரக் கோயில்கள்

நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் கோயில், கருடக் கொடியையுடைய திருமாலின் கோயில், கலப்பைப் படையையுடைய பலதேவன் கோயில், சேவற்கொடியை யுடைய முருகன் கோயில், அறத்துறைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அறிவுறுத்தும் சமணர் புத்தர் முதலியவர் களின் பள்ளிகள் இருந்தன என்று ஊர்காண்காதை யில் மதுரையிலிருந்த கோயில்களைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. வஞ்சி நகரக் கோயில்கள்

பிறைநிலாவினைத் தன் முடியில் தரித்த சிவபெருமான் கோயிலும், ஆடக மாடத்து அறிதுயில் கொள்ளும் திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலும் கால்கோள் காதை"யிலே குறிப்பிடப்படுகின்றன. இவையன்றியும் சாத்தன்கோயில், பேய் பிசாசு பூதங் களுக்கான கோயில்கள், மன்மதன் கோயில், திருமகள் கோயில், கலைமகள் கோயில் முதலியனவும் தமிழகத்தில் அந்நாளில் விளங்கின என்னும் செய்தி சிலப்பதிகாரத்தால் தெரியவருகிறது. சமய ஒற்றுமை சிலப்பதிகாரத்தில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் முதலான சமயங்களைப் பற்றிய குறிப்புகள் வந்துள்ளன. காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் சிவன்கோயில், திருமால் கோயில், அருகர் பள்ளி, புத்தர் பள்ளி முதலியன இருந்தன என்பது முன்னரே கூறப் பட்டது. சிலப்பதிகார காலத்தில் சமண பெளத்த சமயங்கள் தமிழகத்தில் நன்கு பரவியிருந்தன என்பது சே. செ. இ.28