பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 தெரியவருகிறது. கோவலன் சமண சமயத்தினனாகக் குறிக்கப்பெற்றுள்ளான். மதுரைக்குச் செல்லும் வழியில் அவனும் கண்ணகியும் கவுந்தியடிகளைக் கண்டு கைதொழுத போது, அழகும் குடிப்பிறப்பும் ஒழுக்கமும் அருகதேவன் நூலிற் கூறிய விரதம் தப்பாமையும் உடைய நீங்கள் தீவினையாளரைப்போல உமது இடத்தைவிட்டு நீங்கி வருவதற்குக் காரணமென்ன" என்று கவுந்தியடிகள் வினவுவதால் கோவலன் கண்ணகி இருவரும் சமண சமயத்தவர் என்பது புலனாகிறது. மாதரி என்னும் இடைக்குல நங்கை கண்ணகி கோவலரை அடைக்கலமாக ஏற்றுத் தன் மகள் ஐயையை நோக்கி கோவலனார் சாவக நோன்பு உடையார். ஆதலால் கண்ணகி பகலுணவு சமைப்பதற்காகப் புதிய கலன்களைக் கொண்டுவந்து தாருங்கள் என்று குறிப்பிட்ட நிகழ்ச்சி கோவலன் சமண சமயத்தினன் என்பதை விளங்கக் காட்டும். சமணனா யினும் கோவலன் சமயப்பொறை உடையவன், பிறமதக் காழ்ப்பற்றவன். புகாரை விட்டு மதுரைக்குப் புறப்பட்ட நிலையில் முதலில் திருமால் கோயிலை வலம் வந்து வணங்கினான். பின்னர் இந்திரவிகாரங்கள் ஏழையும் வணங்கினான். அதன்பின்னர், சாவகநோன் பிகளால் இடப்பட்ட சிலா தலத்தை வணங்கினான். இவற்றால் கோவலன் சமயப்பொறை விளங்குகின்றது. . - இது போன்றே சிறந்த சிவபக்தனான செங்குட்டுவன் சிவபிரான் அருளால் பிறந்தவன் என்று சிலப்பதிகாரத்தில் இரண்டிடங்களில் குறிக்கப்பட்டுள்ளான். அவன் வடநாடு நோக்கிப் புறப்படும்போது முதலில் சிவன்கோயிலை வணங்கிவிட்டுப் பின்னர் திருமால் பிரசாதத்தை தன் தோளிலே தாங்கி நின்றான். மேலும் புத்த மதத்தின - 61. சிலம்பு; கால்கோட் காதை : 62 அடியார்க்கு நல்லார் உரை. 62. சிலம்பு : 18 சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்." - *..