பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435 ராகக் கருதப்படும் தண்டமிழ்ச் சாத்தனோடும் நட்புக் கொண்டிருந்தான் என்பதும், அருக சமயத்தைச் சார்ந்த கண்ணகிக்குக் கோயில் எடுத்துக் கும் பிட்டான் என்பதும் அவனுடைய சமயப் பொறையைக் காட்டும். கோவலன் இறந்த செய்தி கேட்டுக் கோவலனுடைய காதற்பரத்தை மாதவி தன் தலைமயிரைக் களைந்து பெளத்த சந்நியாசியானாள். அவள் மகள் மணிமேகலை யையும் பெளத்த சமயத்தில் ஈடுபடுத்தினாள். கோவலன் இறந்த செய்தியைக் கேட்ட மாசாத்துவான் பெளத்த சமயம் சார்ந்தான். கண்ணகியின் தந்தையான மாநாய்கன் சமண சமயம் சார்ந்தான். சமண சமயத்தைச் சேர்ந்த கவுந்தியடிகள் வைணவ சமயத்தைச் சார்ந்த மாதரியிடம் சமண சமயத்தைச் சேர்ந்த கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தார்." மாங்காட்டு மறையோன் வைணவன் . அவன் திருமாலின் சிறப்பினை எடுத்துக்கூறக் கோவலன், கண்ணகி கவுந்தியடிகள் மூவரும் பொறுமையுடன் கேட்டனர்." இதுகாறும் கூறப்பட்ட செய்திகளால் சிலப்பதிகார காலத்தில் தமிழ்நாட்டில் பல சமயங்கள் இருந்தன என்றாலும் சமயப்பொறை மேலோங்கியிருந்தது என்பதும், ஒரு குடும்பத்திலேயே பல்வேறு சமயத்தை மேற் கொண்டோர் இருந்தனர் என்பதும், அவரவர் தத்தமக்கு விருப்பமான சமயத்தைத் தழுவ உரிமை இருந்தது என்பதும், அவர்களுக்குள் சமயத்தொடர்பாகப் பிணக்குகள் இல்லை என்பதும், பொதுவாகக் காணின் சமயநம்பிக்கை யும் தெய்வ நம்பிக்கையும் சிறந்து விளங்கின என்பதும், தெய்வவழிபாடும் சமயபோதனைகளும் மக்களால் பெரிதும் விரும்பி மேற்கொள்ளப்பெற்றன என்பதும் தெளிவாக விளக்கமாகின்றன. 63. சிலம்பு; அடைக் கலக் காதை : 21-22. 64. ם ת காடுகாண் காதை : 35:53.