பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிலம்பின் இலக்கியச் சிறப்பு ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது சிலப்பதிகாரம் ஆகும். ஐம்பெருங்காப் பியங்களுள் இன்று முழுவதுமாகக் கிடைப்பன மூன்றே. அவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி என்பன. ஏனைய வளையாபதியும் குண்டலகேசியும் முழுவதுமாகக் கிடைக்கவில்லை. அவற்றுள் சிற்சில பாக்களே கிடைத்துள்ளன. இந்த முப்பெருங்காப்பியங் களுள் பெரிதும் போற்றப்பெறுவது சிலப்பதிகாரமே ஆகும். புதுமைக் கவிஞர் பாரதியார் சீவகசிந்தாமணி யையோ மணிமேகலையையோ பாராட்டியுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்தம் பாடல்களில் சிலப்பதி காரத்தையும், அதனை யாத்தளித்த இளங்கோவடி களையும் பல காற் பாராட்டிச் சென்றுள்ளார். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு' என்றும், யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை என்றும், சேரன் தம்பி இசைத்த சிலம்பு' என்றும் பாராட்டியுள்ளமை வெளிப் படை. அவரே தமிழ்ச் சாதி என்ற தலைப்பில் எழுதி யுள்ள கவிதையில் சிலம்பு, திருக்குறள், கம்பராமாயணம் ஆகியவற்றின் சிறப்பியல்புகளைத் தேர்ந்து தெளிந்து கூறியுள்ளார். " சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும் திருக்குற ளு றுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும், 1. பாரதியார் பாடல்கள்; தமிழ் ; 2 2. ; : செந்தமிழ் நாடு : 7.