பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

437 'எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது' என்று உறுதிகொண் டிருந்தேன் என்னும் கவிதை அடிகளில் சிலப்பதிகாரம் அவர் நெஞ்சை யள்ளியதற்குரிய காரணத்தைக் கூறாமல் கூறியுள்ளார் என்பது உய்த்துணரலாம். இங்குச் செய்யுள் என்பது செய்யப் படுவது செய்யுள்' என்னும் சாதாரண .ெ ப ா ரு ளி ல் ஆளப்பெறவில்லை. கவிதை நயத்தான் செய்யுள்' என்ற சொல்லால் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இத்தகைய இலக்கியச் சிறப்புகள் செறிந்துள்ள சிலப்பதிகாரத்தின் தனிச்சிறப்புகளை இனி முறையே காணலாம். சங்க காலத்தில் காப்பியங்கள் இருந்தனவா என்பது ஆய்வுக்குரிய செய்தி. சங்க காலத்தில்- அதாவது சிவப்பதிகாரத்திற்கு முன்பே-சில காப்பியங்கள் இருந் துள்ளன என்பர் சிலர். சிலப்பதிகாரமே முதன்முதலாகத் தோன்றிய காப்பியம் என்பது வேறு சிலர் கருத்தாகும். சங்கப் பாடல்களை நோக்கும்பொழுது அக்காலத்தில் சிலப்பதிகாரம் போன்ற காப்பியம் எழுந்திருக்க வாய்ப் பில்லை என்றே தோன்றுகின்றது. ஒருவேளை நீண்ட பாடல்கள்-தொடர்நிலைச் செய்யுட்கள் (Epic poetry) சில தோன்றத் தொடங்கி இருக்கலாம். சங்கப் புலவர்கள் தாங்கள் கண்டறிந்த உண்மைகளையும், அனுபவங் களையும் சிறுசிறு பாடல்களாகவே வெளியிட்டுள்ளனர். அவைகளெல்லாம் தொடுக்கப்படாத அழகிய உதிரிப்பூக் களாகவே விளங்குகின்றன. இளங்கோவடிகள்தாம் முதன் முதலில் ப ல் .ே வ று மலர்களையும் கோவையாகத் தொடுத்துப் பன்மணம் விரவ மாலையாக்குவதுபோல் 3. பாரதியார் பாடல்கள்: தமிழச்சாதி : 20-26.