பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 தம் அனுபவத்தையும், தாம் கண்டறிந்த உண்மைகளையும் கண்ணகியின் வாழ்க்கை என்னும் இழையால் தொடுத்துக் காப்பியமாகிய மாலையை உருவாக்கியுள்ளார் எனலாம். சிலம்பின் க ா ைத அமைப்புகளும் இக் கருத்தினை வலியுறுத்தக்கூடிய வகையுள் உள்ளன. முப்பது காதைகளும் முப்பது தனிப்பாடல்களைப் போலக் காட்சியளிக்கின்றன. * ஒவ்வொரு பாட்டும் சங்க காலத்துப் பாடல்போலத் தனித்தனிச் சிறந்து விளங்கும் அழகோடு பொலிகிறது. இதனால், கதையைத் தொடர்ந்து கூறிப்போவது இவருடைய அடிப்படை நோக்கமானாலும் அது மேல் வாரியாகப் பார்க்கும் பொழுது புகார்க் காண்டத்தில் நன்கு விளங்கவில்லை. தனிப்பாடலிலேயே திளைத்து நின்ற சங்க காலத்தில் வளர்ந்த தமிழ்ச் செய்யுள் முறையில் தொடர்நிலைச் செய்யுள் பாடப்புகுந்தால் இப்படித்தான் முடியும்போலும். இக்குறிப்பு ஒன்றே சிலப்பதிகாரம் தமிழ் வரலாற்றில் சங்கத் தமிழின் வளர்ச்சி என்பதனை நிலை நாட்டும் என்கிறார் பேராசிரியர் தெ. பொ. மீ. இளங்கோவடிகள் பத்துப்பாட்டின் தொடர்களைப் LJ3η) இடங்களில் பொன்னேபோல் போற்றுவதைக் காணலாம். சான்றாக ஒன்றைக் காட்டலாம். திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறமகளின் வெறி யாட்டினை அழகுற எடுத்தியம்பும்பொழுது, நளிமலைச் சிலம்பில் கல்நகர் வாழ்த்தி நறும்புகை எடுத்து," குறிஞ்சி பாடி" சிமிழ்இசை அருவியொடு இன் இயம் கறங்க, உருவப் பல்பூத் தூஉய், வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி, குறமகள் சமணத் தமிழ் இலக்கிய வரலாறு; பக். 75. திருமுருகாற்றுப்படை, 239. 239. 241. ב ת + 5.