பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439 முருகியம் நிறுத்து, முரணினர் உட்க, முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர் ஆடுகளம் சிலம்பப் பாடி, பலவுடன் கோடுவாய் வைத்து கொடுமணி இயக்கி" ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி, வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட...' என்று கூறிச் செல்கிறார். இளங்கோவடிகள் கண்ணகியைக் குறவர்கள் வழிபடு வதாகச் சொல்லும்பகுதியில், கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின் குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்யுமின் காப்புக்கடை கிறுமின் பரவலும் பரவுமின் விரவுமலர் துவுமின் ஒருமுலை இழந்த நங்கைக்குப் பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே. என்று குறிப்பிடுகிறார். இதுபோன்று வரும் இடங்களை நோக்கும்பொழுது இளங்கோவடிகள் பத்துப் பாட்டினைப் படித்திருக்கலாம் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. சிறுசிறு சங்கப் பாடல்களை நோக்கப் பத்துப்பாட்டில் வரும் பாடல்கள் நீண்ட பாடல்களாக உள்ளன. அப் பத்துப் பாடல்களைப் போலவே சிலம்பின் காதைகள் அமைந் துள்ளன. எனவே சிலப்பதிகாரம் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய முதல் தமிழ்க் காப்பியம் எனக் கொள்வதே பொருத்தமுடைத்தாகும். காப்பியங்களை இருவகையாகப் பிரிப்பர் ஆய்வாளர் அவை வளர்ச்சிக் காப்பியம் (Epic of Growth), கலைக் காப்பியம் (Epic of Art) என்பன. உலகில் பெரும்பாலான மொழியில் முதன்முதலில் தோன்றியுள்ள காப்பியங்கள் 8. திருமுருகாற்றுப்படை; 246. 9. 17-18 : 24 - ג כ.