பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 வளர்ச்சிக் காப்பியங்களாகவே உள்ளன. வால்மீகியின் இராமாயணமும், வியாசருடைய பாரதமும் வடமொழியில் தோன்றிய வளர்ச்சிக் காப்பியங்களாகும். ஒமரின் இலியட்டும், ஒடிசியும்கூட வளர்ச்சிக் காப்பியங்களே . பழைய வரலாறு மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு காப்பிய மாக உருப்பெறுவதே வளர்ச்சிக் காப்பியம் எனப்படும். இவ் வளர்ச்சிக் கா ப் பி ய ங் க ைள ேய வடநூலார் :இதிகாசங்கள் என்று குறிக்கின்றனர். சிலப்பதிகாரம் ஒரு வளர்ச்சிக் காப்பியமாகத் தோன்றவில்லை. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையாக, நற்றிணையில் வரும் மருதன் இளநாகனார் பாட்டினையும், புறநானூற்றில் பேசப்படும் பேகன் கண்ணகியின் பிரிவினையும் சிலர் கூறியுள்ளனர். நற்றிணை உரைகாரர் பின்னத்துார் நாராயணசாமி ஐயரவர்களும் திருமாவுண்ணி என்பது கண்ணகியைக் குறிக் கின்றது போலும் என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் இம்மேற் கோள்களைச் சிலம்பின் கதைக் கூறுகளாக ஏற்றுக் கொள்ள இயலாதென்றே சொல்லவேண்டும்.பெரும்பாலும் வளர்ச்சிக் காப்பியங்களெல்லாம் நீண்ட நெடுங்காலமாக வழங்கிவரும் ஒரு பெருங்கதை ஒர் ஆசிரியனால் எழுதப் பட்டு ஒழுங்குபடுத்தி ஒரு திரண்ட வடிவம் கொடுக்கப்பட்டே எழுந்துள்ளன. சிலப்பதிகாரத்தின் கதை அமைப்பு ஒர் ஆசிரியரால் நன்கு திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு காப்பியம் என்பதை வலியுறுத்துகின்றதேயன்றிப் பலகாலம் மக்கள் நடுவே உலவிப் பின் வடிவம் பெற்றிருக்கலாம் என்று எண்ணுவதற்குச் சிறிதும் வாய்ப்பளிப்பதாக இல்லை. மேலும் காப்பியத் தலைவி வாழ்ந்த காலத்திலேயே 10. நற்றிணை; 216. _ 11. புறநானூறு: 143-47. 12. திரு. பின்னத்துார் நாராயணசாமி ஐயரின் உரை திருமாவுண்ணியென்பது கண்ணகி கதையைக் குறிக்கின்றது போலும்.'