பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441 ஆசிரியர் இளங்கோவடிகளும் வாழ்ந்திருக்கிறார் என்பது வஞ்சிக் காண்டத்தால் புலப்படுகின்றது. யானும் சென்றேன்...... என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி தன் திறம் உரைத்த தகைசால் நன்மொழி என்ற அடிகளைக் காண்க. இவற்றால் தமிழில் வளர்ச்சிக் காப்பியங்களே இல்லை யென்றும், முதலில் தோன்றியுள்ள சிலப்பதிகாரமே தலைக் காப்பியமாக அமைந்துள்ளது என்றும் உணரலாம். இங்கே பிறிதொரு வினா எழுகின்றது. மேலைநாட்டு இலக்கணப்படி, சிலப்பதிகாரம் ஒரு காப்பியமா என்பதே அவ்வினா. தன்னகரில்லா வீரன் ஒருவனின் பெரு வாழ்வினைச் சித்திரிப்பதே காப்பியம் என மேலை நாட்டார் விளக்கம் தருகின்றனர். காப்பியக் கதை மக்கள் சமுதாயம் முழுவதையுமே கவரத்தக்க வகையில் மிக விரிந்த ஒன்றாக இருக்கவேண்டும். இத்தகைய இலக்கணங் களைக் கொண்டு நோக்கின் சிலப்பதிகாரக் கதை மிகச் சிறிய ஒன்றாகவே திகழ்வதை உணரலாம். எனினும் ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சியைத் தமிழகம் முழுவதற்கும் உரிய செய்தியாக்கி அவளைத் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை மாநகருக்கும் உரிய கற்புத் தெய்வமாகக் காட்டி இளங்கோவடிகள் அதனைக் காப்பியக் கதையின் தகுதிக்கு உயர்த்தியுள்ளார் எ ன ல ா ம்.19 இராமகாதையைப் போன்றோ பாரதத்தைப் போன்றோ சிலம்பின் கதை விரிந்த ஒன்று அன்றென்றாலும் கைதேர்ந்த சிற்பி ஒருவன் தந்தச் சிமிழுக்குள் தன் ஆற்றலையெல்லாம் காட்டிச் சிற்பங்களை வடித்தல்போல இளங்கோவடிகள் தம் புலமை நயத்தையெல்லாம் சிலம்பில் காட்டியுள்ளார். காலஞ் 13. A History of Tamil Literature P. 156.