பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 சென்ற பேராசிரியர் திரு வையாபுரிப்பிள்ளை அவர்கள் சிலப்பதிகாரத்தை விருந்தியல் (Romance) என்ற வகையுள் அடக்கிக் கூறியுள்ளார். விருந்தியல்' என்ற இலக்கிய வகையின் இலக்கணத்தை நோக்கும்பொழுது சிலப்பதி காரத்தை அதனுள்ளும் அடக்கிக் கூறுதல் அருமை யாகின்றது. கீழை நாட்டுக் காப்பிய இலக்கணங்கள் பொருந்தி வருவதாலும், மேலைநாட்டு இலக்கணங்கள் பெரும்பாலும் பொருந்தி வருவதாலும் சிலப்பதிகாரத்தைக் காப்பியம் என்று வழங்குவதே ஏற்புடைத்தாகும். அடுத்து, சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்று பாராட்டப்படும் சிறப்புக்குரியதாக விளங்குகின்றது. அடியார்க்கு நல்லாரும் பழுதற்ற முத்தமிழின் பாடல் ' என்று சிலப்பதிகாரத்தைக் குறித்துள்ளார். இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழும் கலந்து முத்தமிழ்க் காப்பியம் என்ற தனிச்சிறப்புக்குரியதாக விளங்கும் காப்பியம் ஐம்பெருங்காப்பியங்களுள் இது ஒன்றே. மணிமேகலையோ முழுதும் இயற்றமிழ்க் காப்பியமாகவே விளங்குகின்றது; சிந்தாமணியோ பெரிதும் இயற்றமிழாலும் இடையிடையே சிறிது இசைத்தமிழாலும் அமைந்துள்ளது. ஆனால் சிலம்பில் முத்தமிழும் தக்க அளவில் அமைந் துள்ளன. காட்சிகளையும் கருத்துகளையும் விளக்கப் பயன்படுவது இயற்றமிழ்; இசைகலந்த பாட்டாகச் செய்திகளைச் சொல்வது இசைத்தமிழ். மெய்ப்பாடுகள் தோன்ற நடிப்பதற்கேற்ற வகையில் அமைவது நாடகத் தமிழ் . கோவலனும் கண்ணகியும் வாழ்ந்த இனிய வாழ்க் கையைச் சொல்லும் மனையறம் படுத்த காதை, மாதவியின் நடன அரங்கேற்றத்தை விளக்கும் அரங்கேற்றுக்காதை, 14. சிலப்பதிகாரம்; வாழ்த்துக்காதை : 1.35.164. 15. காதை எனப் பெயரிட்டுள்ள அனைத்தும்-இயல் 16. கானல் வரி, வாழ்த்துகாதை-இசை. 17. வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக்குரவை-கூத்து.