பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

443 அந்திமாலையை வருணிக்கும் அந்திமாலைச் சிறப்புச் செய் காதை முதலிய தொடங்கிக் காதை என்று பெயரிடப்பட். டுள்ள அனைத்துமே இயற்றமிழால் அமைந்த பகுதிகளாகும். மங்கல வாழ்த்து, வாழ்த்தும் உரையும் பாட்டும் கலந்து மிளிரும் ஒன்று. இம்மூன்று கூறுகள் மங்கலவாழ்த்துப் பாடலில் இருப்பதாலும் அதன்கண் கதை நிகழ்ச்சியின்மை யாலுமே அதற்கு அங்ங்னம் பெயர் கொடுத்தார் என்பர் அடியார்க்கு நல்லார். இம் மங்கலவாழ்த்து உரைப்பகுதி நீங்கலாக ஏனைய வாழ்த்துப் பகுதியும் பாடற்பகுதியும் இசைத்தமிழின்பாற்படும். கானல்வரி என்பதே இசைப் பாவாற் பெற்றபெயர். வாழ்த்துக் காதையுள்ளும் இசைத் தமிழ்ப் பகுதிகள் நிறைந்துள்ளன. வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர் சூழ்வரி, குன்றக்குரவை முதலியன கூத்தாற். பெற்ற பெயர்களாம். இவ்வுண்மை அடியார்க்கு நல்லார் உரையாலும் நன்கு விளங்கும். வேட்டுவ வரி: கூத்துள் படுதலின், நாடகவரிப் பெய ராய் வேட்டுவரி நிகழ்தலின் இது வேட்டுவ வரியாயிற்று. 19 ஆய்ச்சியர் குரவை: இதுவும் ஆய்ச்சியரிடத்து நிகழ் தலான் ஆய்ச்சியர் குரவையெனக் கூத்தாற் பெற்றபெயர். ஊர்சூழ்வரி: 'இதுவும் கூத்தாற் பெற்ற பெயர். " குன்றக்குரவை: ஆய்ச்சியர் குரவையிற் கூறியது இதற்குங் கூறுக.' _ 18. டாக்டர் உ. வே. சாமிநாதையர்: சிலப்பதிகாரம் -பதிப்பு: உரை, பதிகம், 73 அடியார்க்குநல்லார் 19. டாக்டர் உ. வே. சாமிநாதையர்; பதிகம் 77, அடியார்க்கு நல்லார் உரை. 20. டாக்டர் உ. வே. சாமிநாதையர்; பதிகம் 78.79 அடியார்க்குநல்லார் உரை. 21. டாக்டர் உ. வே. சாமிநாதையர்; பதிகம் 62.83. அடியார்க்குநல்லார் உரை.