பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 இவையெல்லாம் நாடகத் தமிழ்ப் பகுதிகளாக - கூத்து என்பதை நாடகம்' என்ற சொல்லாலேயே சிலம்பில் குறிப்பிடப்படுவதைக் காணலாம். மாதவியை நாடக மேத்தும் நாடகக் கணிகை என்கிறது பதிகம். இங்கு நாடகம் என்பது கூத்தையே குறிக்கிறது. இக்கூத்துப் பகுதிகள் நிறைந்துள்ளமையாலேயே சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் என்னும் பெயரையும் பெற்றது என்னலாம். சிலப்பதிகாரத்திற்குக் குடிமக்கள் காப்பியம் என்ற சிறப்புமுண்டு. சிலம்பில் சோழன் கரிகாற்பெருவளத்தா னும், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் குறிக்கப்பெறுகின்றனர். இம் மூவருள் கரிகாற் பெருவளத்தான் சோழநாட்டின் அரசன் என்ற முறையிலேயே குறிக்கப்படுகின்றான்; கண்ணகியின் வாழ்வில் அவன் நேரடியாகத் தொடர்பு கொண்டா னில்லை; பாண்டிய நெடுஞ்செழியன் கண்ணகி பெருந் துயருக்குக் காரணமாக அமைந்து சிறந்த இடத்தைக் காப்பியத்தில் பெறுகிறான்; சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்துக் காப்பியத்தில் பங்கு பெறு கிறான். என்றாலும் இவர்கள் காப்பியத்தின் தலைவர்கள் அல்லர். காப்பியத்தின் மையமாக விளங்குபவர்கள் கண்ணகியும் கோவலனுமே. ஆகவே இது முடி மன்னர்கள் காப்பியமாகாது குடிமக்கள் காப்பியமாகின்றது. இங்கும் ஒரு சிறு வினா எழுகின்றது. கோவலனும் கண்ணகியும் ஒரு நாட்டில் வாழும் சராசரிக் குடிமக்கட் பிரிவினைச் சேர்ந்தவர்களாகவா உள்ளனர் என்பதே அவ்வினா. *மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர், ஈகை வான் கொடியன்னாள் ஈராறாண்டகவையாள், பெரு நில முழுதாளும் பெருமகன் றலை வைத்த, ஒருதனிக் குடிக ளோடுயர்ந்தோங்கு செல்வத்தான் ஆகிய தொடர்கள் அவர்கள் சமுதாயத்தின் மிக உயர்ந்த நிலையில், அரச னுக்கு அடுத்த நிலையில் வாழ்ந்த பிரிவினைச்சார்ந்தவர்