பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 என்பதனைக் குறிக்கும். அடியார்க்கு நல்லாரும்: தமக்குத் தாமே நிகராய வணிகரென்ற வாராயிற்று' என்கிறார். கோவலனும் கண்ணகியும் செல்வக்குடியினர் என்பது உண்மையே என்றாலும் அரசனைப் பாடுகின்ற. வகையில் அமையாமல் கோவலனையும் கண்ணகியையும். பாடுவதாக அமைவதால் இதனைக் குடிமக்கள் காப்பியம் எனச் சுட்டுதல் பொருத்தமுடைத்தேயாகும். மேலும், ஆய்ச்சியர், வேடுவர், குறவர் முதலிய எளிய மக்கள் வாழ்வினை விளக்குவதாலும் குடிமக்கள் காப்பியமாக அமைகின்றது. சிலப்பதிகாரம் மூன்று உயர்ந்த நீதிகளை விளக்க எழுந்த காப்பியமாகும். அம்மூன்று நீதிகள் யாவை என்பதைப் பதிகம் சுட்டுகின்றது. அவை: (1) அரசியல் பிழைத்தவர்க்கு அறமே கூற்றாக இருந்து கொல்லும். (2) உரைசால் பத்தினியை உயர்ந்தவர்கள் ஏத்துவர். (3) ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பன. இவற்றுள் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது பாண்டிய நெடுஞ்செழியன் வாழ்க்கையால் விளக்கப்படு கின்றது. பத்தினியை உயர்ந்தவர்கள் ஏத்துவர் என்பது காப்பியம் முழுவதும் கண்ணகியின் வாழ்வில் வைத்துப் பேசப்படுகின்றது. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு மென்பது பல இடங்களில் சுட்டப்பட்டபோதிலும் சிறப் பாகக் கோவலன் வாழ்க்கையால் விளக்கப்படுகின்றது. வடமொழியில் அணி நூலுடையார் பாவிகம்' என்று ஒன்றைக் குறிப்பர். பாவிகம் என்பது காப்பியப் பண்பே' என்று விளக்கந் தருகிறது தண்டியலங்காரம். இம்மூன்று நீதிகளுள்ளும் இடை நின்ற பத்தினிப் பெண்டிரை உயர்ந் தோர் ஏத்துவர் என்பதே காப்பியப்பண்பாகிய பாவிகமாக விளங்குகின்றது. இதனை நன்குணர்ந்து உரைவகுத்த அடியார்க்கு நல்லார் மங்கலவாழ்த்துப் பாடலின் உரை க். 22. பதிகம்; 55.60.