பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 கண், கண்ணகியை முற்கூறினார்; பத்தினியை ஏத்தல் உட்கோளாகலின்' என்று கூறியுள்ளார். அரும்பத உரை காரரும் இவளை முற்கூறிற்று கதைநாயகியாகலின்' என்று உரைத்துள்ளார். உயர்ந்தோர் என்பதற்கு மக்களே யன்றித் தேவர் முனிவரும் முதலாயுள்ளோர்' என்று பொருள் கூறியுள்ளார் அடியார்க்கு நல்லார். காப்பியத் தின் முதற்பகுதியாகிய மங்கல வாழ்த்திலேயே கண்ணகி யைத் தொழுது ஏத்துவது குறிக்கப்படுகின்றது. மாத ரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்" என்பது காண்க. காப்பியத்தின் கடைசிப் பகுதியாகிய வரந்தரு காதையில், பத்தினிக்கு நாள்வழிபாடு நடைபெறு வதையும், அரசர்கள் வணங்கி வரம்பெறுவதையும் காண் கிறோம். கண்ணகியின் காற்சிலம்பே நூலுக்குப் பெய ராய் அமைந்துள்ளதும் பத்தினி வழிபாட்டுணர்ச்சியைப் புலப்படுத்துகின்றது. கவுந்தியடிகள் கற்புக்கடம் பூண்ட பொற்புடைத்தெய்வம் என்று ஏத்துகிறார்; இது முனிவர் வாழ்த்தாம். மதுரைத் தெய்வத்தின் பணிவும், தேவர்கள் கண்ணகியை விண்ணுலகத்திற்குக் கொண்டு செல்வதும் தேவர்கள் ஏத்துவதற்குச் சான்றுகளாம். இம்மூன்று நீதிகள் மட்டுமன்றி மேலும் பல நீதிகளை இளங்கோவடி கள் நமக்கு அறிவுறுத்துகின்றார். முன்று மன்னர்களைப் பற்றிப் பேசுவதாலும், மூன்று காண்டத்திற்கும் அன்றைய சேர, சோழ, பாண்டிய நாடுகளின் தலைநகரத்தின் பெய ரைச் சூட்டியிருப்பதாலும், கண்ணகியின் வாழ்வால் மூன்று அரசர்களையும் ஒன்று சேர்ப்பதாலும் ஒன்றுபட்ட மும்மைத் தமிழகத்தை இளங்கோவடிகள் காண விழைந் துள்ளார் என்பதை உணரலாம். காப்பியத்தின் முடிவில் இளங்கோவடிகள் வேண்டுகோளாக உரைக்கின்ற பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் என்ற தொடக்கத்தனவும் உயரிய நீதிகளாம். அரச குலத்தில் பிறந்த இளங்கோவடிகள் அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும் என்ற நீதியையும்,