பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

447 தாம் துறவியானது எதிர்பாராத சூழலில் அண்ணனின் செல்லல் நீங்கவே என்பதனையும், தாம் பெண்ணைப் போற்றும் துறவியே என்பதனையும் காட்ட உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்பதனையும், தம் வாழ்வில் சோதிடன் வாயிலாக விளையாடிய ஊழின் வலியினையே கோவலன் வாழ்விலும் விளையாடுவதையும் விளக்கியுள்ளார் என்னலாம். ஐம்பெருங்காப்பியங்களில் வேறொரு நிலையில் நோக்கும்பொழுது சிலப்பதிகாரம் தனிச்சிறப்புக்குரியதா கின்றது. தமிழுக்கும் சமயத்திற்கும் மிகநெருங்கிய தொடர்பு நீண்ட நெடுங்காலமாக நிலவிவருகின்றது. தமிழால் சமயமும் சமயத்தால் தமிழும் வளர்ந்துள்ளன. சிந்தாமணியோ சமண சமயக் காப்பியம். சிந்தாமணியில் திருத்தக்கதேவர் பிற சமயத்துக் கடவுளர்களைத் தக்க வகையில் மதித்துப் போற்றியுள்ளார் என்றாலும் நூலின் நோக்கம் சமய சமயத்தைப் பரப்புவதே என்பது முத்தி இலம்பகம் முதலிய பகுதிகளால் நன்கு விளங்குகின்றது. மணிமேகலையோ புத்த சமயக் காப்பியம். சீத்தலைச் சாத்தனார் தெரிந்தோ தெரியாமலோ முதன் முதலாக ச் சமயக் காழ்ப்பினை இலக்கிய உலகத்தில் விதைத்துவிட்டுச் சென்றுள்ளார். சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதை" யில் பரசமய கண்டனம், மணிமேகலையின் வாயிலாகச் சீத்தலைச் சாத்தனார் செய்வதைக் காணலாம். வளையா பதி, பெளத்த நூல் என்று சிலரும், சமண நூல் என்று சிலரும் கூறுகின்றனர். குண்டலகேசி சமண காவியமென்பது அறிஞர் முடிவு. ஆனால் சிலப்பதிகாரமோ சமயச்சார் பற்றுப் பொதுமைக் காப்பியமாகத் திகழ்கின்றது. லெம்பில் பல்வேறு சமயங்கள் பேசப்படுகின்றன; பல்வேறு தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. இந்திர விழவூர் எடுத்த காதையில், சிவன், முருகன், பல தேவன், திருமால், இந்திரன் ஆகியோர் கோயில்கள் குறிக்கப்படுகின்றன. கனாத்திறமுரைத்த காதையில்