பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 சாத்தன்கோயில் பேசப்படுகின்றது. நாடுகாண்காதை, திருமால்கோட்டம், புத்த தருமம் புகலப்படும் இந்திர விகாரம் ஆகியவற்றைச் சுட்டுகின்றது. காடுகாண்காதை, திரும்ாலின் நின்ற கோலத்தையும், கிடந்த கோலத்தையும் அழகுறப் புனைந்துரைக்கின்றது. இளங்கோவடிகள் சிறு தெய்வத்தைக்கூடச் சுட்ட மறந்தாரல்லர். வனதெய்வ மொன்றைக் காடுகாண் காதையில் சொல்லிச் செல்கிறார். வேட்டுவவரி கொற்றவை வழிபாடாகவும், ஆய்ச்சியர் குரவை திருமால் வழிபாடாகவும், குன்றக்குரவை முருக வழிபாடாகவும் விளங்குகின்றன. நாடுகாண் காதையில் அருகன் திருப்புகழ் பாங்குறப் பக ரப்பட்டுள்ளது. சிலம் பின் பாத்திரங்களும் பல்வேறு சமயத்தைச் சார்ந்: தவர்களாகவே உள்ளனர். கோவலனும், கண்ணகியும், கவுந்தியடிகளும் சமண சமயத்தவர்கள். தேவந்தியோ சாத்தனை வழிபடுகின்ற அந்தணகுலப் பெண். மாங் காட்டு மறையவனும் மாதரியும் வைணவர்கள். மாதவியோ சமண சமயத்தைச் சார்கிறாள். செங்குட்டு. வனோ சைவ சமயத்தைச் சார்ந்தவன். என்றாலும் இவர்கள் எல்லோரிடத்திலும் சமயக்காழ்ப்புக் காணப்பட வில்லை. அவரவர்கட்குத் தங்கள் தங்கள் நெறி உயர்ந்த தாகத் தெரிகின்றது. தங்கள் சமயத்தை உயர்த்தப் பிற சமயத்தைப் பழிக்கும் இழிதகைமை இவர்கள்பால் இல்லை. எல்லோரும் பத்தினி வழிபாடு என்னும் புதிய சமயத்தின் (Pattini cult) தெய்வத் திருநிழலில் ஒன்றுகூடிக் கைகூப்பி வனங்கும் விழுமிய காட்சியினையே சிலம்பு வழங்குவது இலம்பின் சிறப்பினையும், இளங்கோவடிகளின் பெரு நெஞ், இனையும் என்றென்றும் உலகுக்குப் பறைசாற்றிக் கொண் டிருக்கும் வகையில் அமைந்துள்ளது என்னலாம்.28 இதுகாறும் கூறியவற்றால், சங்க காலத்தில் முதலில் தோன்றிய காப்பியம் சில ம்பு என்பதும், அது ஒரு கலைக் 23. சில ம்பு; வாழ்த்துக்காதை : 185–202.