பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

449 காப்பியம் என்பதும், முத்தமிழ்க் காப்பியம் என்பதும், குடிமக்கள் காப்பியம் என்பதும், சிலம்பு எடுத்துரைக்கும் நீதிகள் யாவை என்பதும், அது சமயப் பொதுமைக் காப்பியம் என்பதும் இனிது விளங்கும். இனி, சிலம்பின் நூலகத்தே விளங்கும் இலக்கியச் சிறப்புகளைக் காணலாம். இளங்கோவடிகள் ஒரு கலைக்காப்பியக் கவிஞர் (Literary Epic poet). அவர் படிப்பவர்கட்காகக் காப்பியம் எழுதினாரேயன்றி வளர்ச்சிக் காப்பிய ஆசிரியர்களைப் போன்று கேட்பவர்கட்காக எழுதவில்லை. ஆதலால் உயிரற்ற தொடர்களைப் (Stock Phrases) பயன்படுத்து வதைப் பெரிதும் ஒதுக்கித் தள்ளியுள்ளார். அழகும் கவிதைச் சுவையும் நிரம்பிய சொற்களையே இனங்கண்டு எடுத்தாளுகின்றார். கண்ணகியை வீரபத்தினி (பதிகம்), உரைசால் பத்தினி(பதிகம்),கய மலர்க்கண்ணி, திருமாமணி (மனையறம், வேட்டுவவரி), திருத்தகுமாமணிக் கொழுந்து (அடைக்கலம்), தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி (அடைக்கலம்), பூம்புகார்ப் பாவை (வாழ்த்து) ஆகிய அழகிய அழியாத் தொடர்களாலேயே குறித்துள்ளார். இவ்வாறே கோவலனையும், காதற்கொழுநன் (மனை யறம்), செல்லாச் செல்வ, இல்லோர் செம்மல், கருணை மறவ (அடைக்கலம்) ஆகிய தொடர்களால் பேசுவதும் நயமாக அமைந்துள்ளது. பிறவி அழகினைச் செய்யாக் கோலம் (கொலைக்களம்) என்றும், ஞாயிற்றினை உச்சிக் கிழான் (கனாத்) என்றும், வான்கண் (நாடுகாண்) என்றும் சிறந்த சொற்களால் சொல்லிச் சிறந்த கவிதை யைப் படைத்துள்ளார். எந்த நிகழ்ச்சியானாலும் கருத் தானாலும் உயர்ந்த கவிஞர்களால் சொல்லப்படும் பொழுது அந்த நிகழ்ச்சியும் கருத்தும் தரங்குறையாமல் அமைந்துவிடும். கண்ணகியும் கோவலனும் நெடுநிலை மாடத்து இடை நிலத்து அரமியமேறி இன்பம் நுகர்ந்தனர். இதனைச் சொல்லும் இளங்கோவடிகள் பண்பாடு குன்றாத வகையில் மிகுந்த நயப்பாட்டோடு தாரும் மாலையும் சே. செ. இ-29