பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 தம்முள் மயங்கி என்று சொல்கிறார்.24 அரங்கேற்றத் தின் முடிவில் மாதவியின் மாலையை கூனியொருத்தி விலை. கூறி நின்றாள். ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பசும்பொன் பெறுவது இந்த மாலை என்று சாற்றுகிறாள். மாதவிக்கு ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பரிசம் என்னாமல் மாலைக்குப் பரிசம் என்று மிகுத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இடக்கரடக்கலாகச் சொல்லுவது கவிதைச் சுவை பயப்பது மட்டுமல்லாமல் நூலாசிரியரின் உயர்ந்த உள்ளப் பண்பையும் புலப்படுத்துகின்றது. மேலும் கண்ணகியை வடுநீங்கு சிறப்பின் மனையகம் என்று குறிப்பதும், மாதவியின்பால் கோவலன் கொண்ட விருப்பத்தினை விடுதலறியா விருப்பு என்பதும் நல்ல கவிதை வெளிப்பாடு களாகும். s இளங்கோவடிகள் கவிதைப் போக்கில் சில தனி யியல்புகள் வெளிப்படுகின்றன. எண்களை ஒன்றோ டொன்று உறழ்ந்து கூறும் முறை இவரிடம் காணப் படுகின்றது. -

இருமுக்காவதம் (கட்டுரை), ஐயைந்து இரட்டி’ (நீர்ப்படை), ஆறைங்காதம்' (நாடுகாண்) முதலியன காண்க. *

சில தொடர்களுக்கு இடம்நோக்கி நாம் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. L

  • மாசில் கற்பின் மனைவியோ டிருந்த

ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு 28 என்னுமிடத்தில் மாசில் கற்பின் மனைவி கண்ணகி யோடிருந்த அறவி கவுந்தியடிகள் என நாம் எளிதில் அறிகிறோம். 24. சிலம்பு; மனையறம் படுத்த காதை : 9-83. .164-166 : அரங்கேற்று காதை وو .25 26. , புறஞ்சேரியிறுத்த காதை : 1.02.103.