பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451. அனநடை மாதரும் ஐயனுந் தொழுது' என்னுமிடத்தில் ஐயன் கோவலன் என்பதும், அன்ன நடை மாதர் கண்ணகி என்பதும் கதைப் போக்கில் விளங்கு கின்றன.

  • கணவனோ டிருந்த மணமலி கூந்தலை ' கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும்

மாதவத் தாட்டி' , ' என்று வரும் இடங்களில் மணமலி கூந்தல் , கொடுங்குழை மாது' என்பன கண்ணகியைச் சுட்டி நிற்கின்றன, இவ்வாறே,

  • கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும்

வருந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப 9 என்னுமிடத்திலும் கருந்தடங்கண்ணி என்பதால் கண்ணகி குறிப்பிடப்படுகிறாள். இளங்கோவடிகள் உயிரற்ற தொடர்களைப் பயன் படுத்தவில்லை என்று சொல்வதற்கில்லை. கொள்கை' என்ற சொல்லைப் பலவிடங்களில் சேர்த்துச் சொல்வது ஒர் இயல்பாக இளங்கோவடிகளிடம் காணப்படுகின்றது.

  • வாயில் கழிந்து தன்மனை புக்கனளால் .

கோவலர் மடங்தை கொள்கையின் புணர்ந்தென. என்றும், குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து படுகதிர் அமையம் பார்த்திருந் தோர்க்கு.' என்றும், - 27. சிலம்பு; புறஞ்சேரியிறுத்த காதை : 175. 28. , , வேட்டுவ வரி : 46. 29. ,, காடுகாண் காதை : 205-206. 30. † : 5 166-167 ל. 31. גם புறஞ்சேரியிறுத்த காதை : 14-16 32. ,, கடலாடு காதை : 1.72.174.