பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

  • திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்

கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனன் மாமலர் நெடுங்கண் மாதவி தானென்’’** என்றும் வருமிடங்கள் காண்க. பெரும்பாலும் மோனை நயம் தோன்ற வரும் இடங்களில் இச்சொல் கையாளப் பட்டுள்ளது. எனவே இளங்கோவடிகள் அருகியே உயிரற்ற தொடர் களை ஆளுகிறார் என்பது புலப்படும். இச்சொல்லைத் தவிர வேறு சொற்கள் எதனையும் இவ்வாறு பலகால் ஆளுவ தாகத் தெரியவில்லை. இச்சொல்லும் கவிதை மோனை நயம் நோக்கி ஆளப்படுவதால் இச்சொல் சோர்வினைப் பயக்கவில்லை. கவிதையின் குணச் சிறப்புகளுள் ஒன்று ஒலிநயம் ஆகும். உணர்ச்சிகளைக் கவிஞன் தான் கையாளும் சொற்களின் ஒலியைக் கொண்டே உருவாக்கிவிடுவான். எல்லாக் காப்பியக் கவிஞர்களும் ஒலிநயத்தைக் கொண்டு சூழ்நிலை களையும் உணர்ச்சிகளையும் சிறப்பாக வருணிப்பதனைக் காணலாம். இளங்கோவடிகளும் இவ்வொலி நயத்தினைத் தான் காப்பியத்தில் ஆங்காங்கே கையாண்டுள்ளார். கண்ணகி கோவலன் திருமணம் நடைபெறுகின்றது. திருமணம் நடைபெறுமிடத்தில் இயல்பாக எழக்கூடிய சலசலப்பினை,

  • விரையினர் மலரினர் விளங்கு மேனியர்

உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர். 34 33. சிலம்பு; புறஞ்சேரியிறுத்த காதை : 14.16. 34. , மங்கல வாழ்த்துப் பாடல் : 54-59.