பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453 ஆகிய அடிகளில் அமைத்துக் காட்டுவதனைக் கூர்ந்து நோக்கி உரையார். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியைக் கண்ணகிக்கு ஒரு பெண் தெரிவிக்கிறாள். அவள் கலக்க நிலையை இளங்கோவடிகள்,

சொல்லாடாள் சொல்லாடா நின்றாளங் நங்கைக்குச்

சொல்லாடுஞ் சொல்லாடுந் தான்' என்ற அடிகளால் இனிது விளக்குகிறார். கண்ணகி வழக்குரைத்து வென்றாள். மன்னனும் அவன் மனைவியும் உடன் மாள்கின்றனர். சீற்றம் தணி யாத பத்தினி, ஏழு பத்தினிப் பெண்டிர் வரலாற்றைச் சொல்லிவிட்டு வஞ்சினம் உரைக்கின்றாள். மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோ டொழிப்பென் மதுரையுமென் பட்டிமையும் காண்குறுவாய் நீயென்னா விட்ட கலா ேே என்பதன் கண் அவள் வஞ்சினம் உரைத்த செய்தி சொல்லப் படுகின்றது. வல்லாற்றுகள் கண்ணகியின் சீற்றத்தையும் சொற்களில் உள்ள அழுத்தத்தையும் உணர்த்துகின்றன. இவ்வாறு இளங்கோவடிகள் ஒலிநயத்தை இடமறிந்து கையாண்டு காப்பியத்திற்கு எழிலூட்டுவதைக் காணலாம். கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் அழகிற்காகவும், கருத்துகளை விளக்குவதற்காகவும் உவமைகளைக் கை யாளுவர். 35. சிலம்பு; துன்ப மாலை : 9.10. 36. 3 : வஞ்சின மாலை : 35.38.