பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 உவமை என்னும் தவலருங் கூத்தி' என்னும் கூற்றே காப்பியத்தில் உவமையின் இடத்தினை நன்கு விளக்கும். இளங்கோவடிகள் பல உவமைகளைக் கையாண்டுள்ளார். தொல்காப்பியம் உவமைகளை நான்கு வகையாகப் பிரித்துக் கூறும். அவை வினை, பயன், மெய், உரு என்பன. இந்நான்கு வகை உவமைகளையும் இளங்கோவடிகள் கையாண்டுள் ளார். பல இடங்களில் மரபாகச் சொல்லப்படும் உவமை களையும் உருவகங்களையும் பயன்படுத்தினாலும் சில விடங்களில் பழைய உவமைகளைச் சொல்லும்பொழுதும் சொல்லும் முறையை மாற்றி அழகுபடுத்துகிறார். போதிலார் திருவினாள் புகழுடை வடிவு' * பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென.' 37. சிலம்பு; துன்ப மாலை : 30-31 இப்பொருளணிகளிற் பல, உவமமென்ற ஓரணி யின் அடியாகவே தோன்றின என்பது பல்லோர் துணிபு. ஆசிரியர் தொல்காப்பியனாரும் இத் துணி பினர் போலும். இது வடமொழி அப்பைய தீrதி தரவர்களுக்கும் உடன்பாடாதல், உவமை என்னும் தவலருங் கூத்தி பல்வகைக் கோலமும் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவர் இதயம் நீப்பது மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே என்ற அவரது சித்திர மீமாஞ்சைக் கூற்றின் விளக்கமே. டவி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்; தமிழ்மொழி யின் வரலாறு, பக். 60, 61. 38. சிலம்பு; மங்கலவாழ்த்துப் பாடல் : 26. 39. ג ג அரங்கேற்று காதை ; 157.