பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

457

  • கொடுங்கோல் வேந்தன் குடிகள்போலப்

படுகதிர். அமையம் பார்த்திருந் தோர்க்கு" - B ' கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர் ! முதலிய வினையுவமைகள் பயின்றுள்ளன. இளங்கோவடிகள் கண்ணகி கோவலன் மாதவி ஆகிய மூவரையுமே வெவ்வேறு நிலையில் உவமையாகக் கூறி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. கண்ணகியின் அழகினையும், கற்பு மேம்பாட்டினையும் கூற வருகின்றவர் முறையே திருமகளையும், அருந்ததியையும் உவமையாகக் கூறாமல் அவர்களைப் பொருள்களாக்கிக் கண்ணகியின் அழகினையும் கற்பு மேம்பாட்டினையும் உவமையாக்குகிறார். இவ் விடத்தில் கண்ணகிக்கு ஏற்றந் தர அவளை உவமையாக்கி யுள்ளார் என்பது புலப்படுகின்றது. மலையமாருதம் தெருவில் திரிகின்றது. வண்டினொடும் இன்னிளவேனிலொடும் திரியும் ம ைல ய ம .ா ரு த ம், பாணரொடும், பரத்தரொடும் திரியும் கோவலனைப் போன்றுள்ளதாகக் கூறுகின்றார். இவ்விடத்தில் கோவலன் பண்பினை இப்படி உவமிப்பதால் விளக்குகிறார் என்னலாம். கோசிகமாணி நீர்நிலையில் கோவலனைக் காண் கின்றான். கோவலன் உருவம் இளைத்திருந்தமையாலும், கோசிகமாணியின் கட்புல மயக்கத்தாலும் நிற்பவன் கோவலன் தானா என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆதலால் பக்கத்திலிருந்த மாதவிக் கொடியை நோக்கி அவன், கோவலனைப் பிரிந்த மாதவி யைப் போல வாடி நிற்கும் மாதவிக் கொடியே என் கிறான். 58. சிலம்பு; புறஞ்சேரி யிறுத்த காதை : 15.16. 59. , கட்டுரை காதை : 148.149.