பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

  • கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய

மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்' என்பது கோசிகமாணியின் கூற்று. இங்கு மாதவியின் துயரத்தின் ஆழத்தினைப் புலப்படுத்துவதோடு கோவல னைத் தெரிந்துகொள்வதற்காகவும் மாதவியை உவமை யாகச் சொல்கிறான் கோசிகமாணி என்பது விளங்கு கின்றது. இவ்வாறு சிறப்பாக மூன்று பாத்திரங்களையும் உவமை யாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடிகள் அரசியலைக் கூர்ந்து நோக்கிப் பல இடங்களில் அரசியல் சார்பான உவமைகளைப் படைத்துள்ளார்.

  • கறைகெழு குடிகள் கைதலை வைப்ப

அறைபோகு குடிகளோ டொருதிறம் பற்றி வலம்படு தானை மன்னர் இல்வழிப் புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்' இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியின் இடைநிலம்: '

  • விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்

தண்பதம் கொள்ளும் தலைநாட் போல கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல * கொடுங்கோல் வேந்தன் குடிகள்போலப் படுகதிர் அமையம் பார்த்திருந் தோர்க்கு 60. சிலம்பு; புறஞ்சேரியிறுத்த காதை : 48 : 49. 61. ;: அந்திமாலைச் சிறப்புச்செய் காதை o 9-12. 62. :ל ל இந்திரவிழவூரெடுத்த காதை : 59.60. 63. I j கடலாடு காதை 159-160 64. 3 * காடுகாண் காதை : 60.61. 65. 3 * புறஞ்சேரி யிறுத்த காதை : 15.16.