பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 திங்கள் முகத்தாளை' வேற்கண்ணாள்?? பவளச் செஞ்சுடர்' பவளச் செவ்வாய்த்தி' ஆகிய இடங்களைக் காண்க. சிலவிடங்களில் பழைய உவமைகளையே புதிய முறையில் சொல்லியுள்ளார். பெண்களின் சாயலுக்கு மயிலின் சாயலையும், நடைக்கு அன்னத்தினையும், பேச்சுக்குக் கிளியினையும் சொல்வது மரபு. அவற்றைத் தான் கண்ணகியின் சாயல், நடை, பேச்சு ஆகியவற்றிற்கு ஒப்பிடுகிறார். என்றாலும் சொல்லும் முறையில் மாற்றம் காணப்படுகின்றது. மயில் கண்ணகியின் சாயலுக்குத் தோற்றுக் கானகம் புக்கதாம். நடைக்குத் தோற்று அன்னம் பொய்கையில் செறிந்ததாம். பேச்சுக்குத் தோற்ற கிளிகள் மழலைக்கிளவிக்கு வருந்தின வெனினும் மலர்க் கையின் நீங்காது உடன் உறைவனவாயினவாம். பழைய உவமைகளில் புதிய உயிரோட்டம் இருப்பதைக் காண லாம். கண்ணகியின் துதல், புருவம், இடை, கண் ஆகிய வற்றைக் கோவலன் பாராட்டுகின்ற இடத்திலும் இ த் த ன் ைம நிலவுவதைக் காணலாம். துதலுக்குச் சிவபிரான் முடியில் உறையும் பிறையும், புருவத்திற்குக் காமன் கரும்பு வில்லும், இடைக்கு வச்சிரப்படையும், கண் பார்வைக்கு முருகப்பிரான் வேலும் உவமைகளாகக் கூறப் பட்டுள்ளன. இவற்றை புகழுவமையலங்காரம் என்கிறார் அடியார்க்குநல்லார். (பக். 51. அடியார்க்கு நல்லார் - 76. சிலம்பு; கானல் வரி : 56. 77. 5 j. வஞ்சினமாலை : 19. 78. 5 : அழற்படு காதை : 51. 79. 5 கட்டுரை காதை : 3. 80. > * மனையறம் ப டு த் த காதை : 49.52. அடியார்க்குநல்லார் உரை.