பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 தோற்றம் உருவகமாகப் புனையப்படுகின்றது. கடலை ஆடையாக உடுத்த நிலமகள், மலைகளாகிய ஆகம்: அவளுக்கு ஆரமாக அமைகின்றது பேரியாறு; மழை கூந்தலா கின்றது. அந்த மண்ணகமடந்தையின் போர்வையாகிய இருட்டை நீக்கி உதயமால் வரையில் தோன்றுகிறான் உதய ஞாயிறு. இங்கும் பெண்ணின் உருவகம் கானல்வரியில் *மருங்கு வண்டு சிறந்தார்ப்ப' என்ற பாட்டில் காவிரி பெண் ணாக உருவகிக்கப்பட்டுள்ளது. புறஞ்சேரி யிறுத்த காதை .யில் வைகையைப் பொய்யாக் குலக் கொடியாக உருவகம் செய்துள்ளார். இவ்வுருவகங்களில் சில மரபை ஒட்டியவை. நிலத்தையும், ஆற்றினையும் பெண்ணாக வருணித்தல் மரபு. அந்திமாலையையும், குளத்தினையும், கதிரின் தோற்றத்தினையும் வேறு வகையாகப் புனைந்திருக்கலாம். பெண்மையை வழிபடும் இளங்கோவடிகள் அவற்றையும் பெண்மைக் காட்சியாகவே உருவகித்துள்ள சிறப்பு நினைந்து நினைந்து மகிழ்தற்குரியதொன்றாகும். இம் முற்றுருவகங்கள் தவிர வேறு சில சிறுசிறு உருவகங்களையும் சொல்லிச் சென்றுள்ளார். கண்வலை (கானல்வரி), பழம்பகை (நாடுகாண் காதை), துயர்க்கடல் (புறஞ்சேரி யிறுத்த காதை), பசிப்பிணி (அடைக்கலக் காதை), உயிராணி (அழற்படு காதை) முதலியவற்றைச் சான்றாகக் காட்டலாம். இயற்கையை வருணிப்பதில் தமிழ்க் கவிஞர்கள் மிகச் சிறந்த இடத்தைப் பெறுகின்றனர். இயற்கையை அழகுக் கூடமாகக் காண்பவர் சிலர்; இயற்கையை உவமை, உருவகம் ஆகியவற்றின் உறைவிடமாகக் கொள்பவர் சிலர்; இயற்கையை வாழ்க்கையின் பின்னணியாகக் காட்டுபவர் சிலர். இம்மூன்று நிலைகளையும் சிலப்பதிகார்த்தில் காணலாம். கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகள் துணையோடு மதுரை நோக்கிச் செல்கின்றனர். சோலை வழியாகவும் சாலை வழியாகவும் அவர்கள் செல்கின்றனர். அச்சோலை வழியை மிக அழகாக வருணிக்கிறார்.