பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

463 பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே, மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் கையறு துன்பம் காட்டினுங் காட்டும்; உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர்தேர் பழம்பகை முட்டினும் முட்டும்; மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்துச் செஞ்சுளைப் பலவின் பரற்பகை உறுக்கும். ' என்று அடிகள் சோலை வழியைப் புனைந்துரைக்கின்றார். இவ்வருணனையில் இயற்கையை உள்ளவாறு வருணித் துள்ளார். இதில் மிகையாக எதனையும் எடுத்துச்சொல்ல வில்லை. அழகும் ஆற்றொழுக்கும் நிறைந்த வருணனை. இதைத் தொடர்ந்துவரும் வயல் வழி வருணனையும், காடு காண் காதையில் வலப்பக்க நெறியின் இயல்பு கூறுமிடத்தில் வரும் கானம், சிறுமலை முதலியவற்றின் வருணனைகளும் இ னி ய வருணனைகள்; இயல்பான வருணனைகள். இயற்கையை இயற்கை என்ற நிலையிலேயே வருணிப் பவைகள். இயற்கையை உவமை, உருவகம் ஆகியவற்றின் உறைவிடமாகவும் கொண்டுள்ளார் இளங்கோவடிகள்.

உள்ளகம் நறுந்தா துறைப்ப மீதழிந்து

கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக் கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்தகத் தொளித்து நீருகுத்து'8" கொடி நடுக்குற்றதுபோல ஆங்கவன் அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணிர் உகுத்து 99 மதிபுரையும் நறுமேனி _ 84. சிலம்பு; நாடுகாண் காதை ; 67.75. 85, 5 ל இந்திரவிழவூரெடுத்த காதை : 235-238. 86. ג כ காடுகாண் காதை : 174-75. 87. | 1 ஆய்ச்சியர் குரவை ஒன்றன் பகுதி.1.