பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464. " பொழிகதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேணிலங் __ கொண்டென . ஆகிய உவமைகள் இயற்கையைச் சார்ந்த உவமைகள். பொய்கை உருவகம், நில மகள் புலம்பல் முதலிய உருவகங் களும் இயற்கை நிகழ்ச்சிகளில் உருவகமாக விளங்குவது வெளிப்படை. இயற்கையை வாழ்க்கையின் பின்னணியாக மிகத். திறனோடு கையாண்டுள்ளார் இளங்கோவடிகள். மனிதப் பண்புகளை இயற்கையின்மேல் ஏற்றிச் சொல்வது கவிஞன் உத்திகளுள் ஒன்று. இளங்கோவடிகள் இவ்வுத்தியினைத் திறம்படக் கையாண்டுள்ளார். கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளும் வைகைக் கரையை அடைகின்றனர். வைகையின் மேற்பரப்பு வண்ண மலர்களால் நிறைந்துள்ளது. நீர்ப்பரப்பு முழுவதையும் மலர்கள் மறைத்திருப்பது கண்ணகியின் வாழ்வில் நேர இருக்கும் துயரத்தை வைகை தானறிந்திருப்பதுபோலவும் அதனை வெளிக்காட்டாவாறு தன்னைப் புண் ணிய நறு மலராடையால் போர்த்துச் செல்வது போலவும் கூறு. கின்றார். இதனை,

  • வையை யென்ற பொய்யாக் குலக்கொடி தையற் குறுவது தானறிந் தனள் போல் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி என்று விளக்குகின்றார்.

கருநெருங் குவளையும் ஆ ம் ப லு ம் கமலமும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் வரப்போகும் துயரத்தை ஐயமின்றி அறிந்தனபோல வண்டுகள் பாடும் பண்ணிர்மை யால் வருந்தி ஏக்கமுற்று அழுது கண்ணிரைக் கொண்டு: கால் பொருந்த நடுங்கின என்றார். கொடிகள் வர 88. சிலம்பு; துன்ப மாலை; 30-31 89. * - புறஞ்சேரியிறுத்த காதை : 170.73.