பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

465 வேண்டாம் என்று சொல்வதுபோல் பறந்தன என்றும் கூறு கின்றார். இவ்விடங்களில் எல்லாம் இயற்கையின்மேல் மனிதப்பண்புகள் ஏற்றிக் கூறப்பட்டுள்ளன. வாழ்வோடு இயற்கை இரண்டறக் கலந்து விளங்குகின்றது. காப்பிய ஆசிரியர்கள் இடப்பெயர்களையும், கப்பல் முதலியவற்றின் பெயர்களையும், ஆயுதங்களின் பெயர் களையும் அடுக்கிக் கூறி இசை பொருந்திய கவிதையாக்கு வதைக் காப்பியங்களில் காணலாம். மில்டன் இடங்களின் பெயர்களைத் தொகுத்துச் சொல்லிக் கவியாக்குவதைத் துறக்க நீக்கம் (Paradise Lost) காப்பியத்தில் காணலாம். ...... • ‘Though all the Giant broad Of Pblegra with th' Heroic Race were joined That fought at Theb's and Ilium, on each side Mixt with auxiliar Gods; and what resounds In Fable or Romance of Uthers Son Begirt with British and Armoric Knights And all who since, Baptiz'd or Infidel Jousted in Aspramont or Montalban Damasco, or Marocco, or Trebisond» Or whoem Biserta sent from Afric shore When Charlemain with all his Peerage fell By Fonterabbia.” — Paradise Lost; I : 575-587. ஒமரின் இலியட் காப்பியத்தில் கப்பல்களின் பட்டியல் தரப் பட்டுள்ளது. (See the Ilaid of Homer Translated by Alexander Pope–Book II p. 37&38.) stbu gör Lugol–#35G56? களின் பெயர்களை எடுத்துச் சொல்லிக் கவிதையாக்கு வதைச் சுந்தரகாண்டத்தில் காணலாம். இளங்கோவடிகள் மரத்தின் பெயர்களையும், மலர்களின் பெயர்களையும் எடுத்துக் கூறி அவற்றிலிருந்து நல்ல ஒசைநயத்தையும் கவிதையையும் வெளிக் கொணர்கிறார். (Ilanko extracts music out of the names of flowers and trees.) சே. செ. இ.30