பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்களின் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்99...... என்ற அடிகளைக் காண்க. சிலேடையணி சங்க இலக்கியத்தில் வருவதாகத் தெரிய வில்லை. சிலம் பில் சிலேடையணி ஒரிரு இடங்களில் வரு கின்றது. கண்ணிர் கொண்டு காலுற நடுங்க (புறஞ்சேரி யிறுத்த காதை) என்பதில் கண்ணிர் என்பதனைக் கள் நீர் என்றும், கண்ணிர் என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம். அருந்திறல் வேனிற் கலர் களைந்துடனே, வருந்தினை போலுந் என்ற தொடரில் அலர் களைந்து என்பது பழிச்சொல் பொறாமை, மலர்களை நீக்குதல் என்னும் இருபொருளில் கையாளப் பெற்றுள்ளது. மேலும் மாதவியின் இரண்டாவது கடிதம், கோவலன் தன் தந்தைக்கு எழுதிய கடிதம் போலவும் அமைகின்றது. சிலம்பில் கையாளப்பெறும் ஆசிரியப் பாக்கள் நன்கு மெருகுபடுத்தப்பட்டுள்ளன. சங்க இலக்கியப் பாடல் களில் சிலவற்றின் நடை கடுமையானதாக அமைந்துள்ளன. ஆனால் சிலம்பில் ஆசிரியப்பா எளிமையும் இனிமையும் மிக்கனவாய் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (The Ahavel metre is perfected in cilappatikaram.) இவ்வாறு இளங்கோவடிகள் காப்பியத்தில் ஒலிநயம், உவமை, உருவகம், இயற்கை வருணனை ஆகியன சிறப்பாக அமைத்துக் காவியத்தின் இலக்கியச் சிறப்பினை உயர்த்தி யுள்ளார் எனத் தெளியலாம். 90. சிலம்பு; புறஞ்சேரியிறுத்த காதை 151-159.