பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி 2 மணிமேகலை சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய நூல் மணி மேகலை ஆகும். சிலப்பதிகாரத்தோடு உரைப்பொருள் முற்றிய மணிமேகலை என்ற தொடர் இவ்வுண்மையை உணர்த்தும். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்த னார் இயற்றியுள்ள மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையினைக் கதைத் தலைவியாகக் கொண்டது. இம்மணிமேகலையுள் வஞ்சிமா நகர் புக்க காதையில் சேரன் செங்குட்டுவனைப் பற்றியும், வஞ்சிநகரத்தைப் பற்றியும் சில செய்திகளை நாம் அறிய வருகின்றோம். அவை வருமாறு: செங்குட்டுவன் சேரன் செங்குட்டுவன் சேனைகள் வஞ்சிப்பூவினைத் தம் தலையிலே சூடி, மலைகளைப் போன்ற யானை களோடும் தேரோடும் குதிரையோடும் கடல்போலும் முழக்கமிட்டுக்கொண்டு அவற்றைச் செலுத்திச் சென்று கங்கைப் பேரியாற்றின் கரையில் தங்கி, வங்கம் என்னும் ஒருவகை மரக்கலத்தின் உ த வி யால் அவ்வாற்றின் வடகரையில் இறங்கி, கனகன், விசயன் முதல் உத்தரன், விசித்திரன் முதலிய ஆரிய அரசர் பலரையும் வென்று, அவர்களுடைய அழகிய பொன்முடி அணிந்த தலைமீது பத்தினிப் படிவம் சமைத்தற்குரிய-இமயமலையினின்றும் வெட்டி எடுக்கப்பட்ட கல்லையும் தனது வெற்றியின்