பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 அடையாளமாகப் பொன்னால் செய்யப்பட்ட வாகையை யும் சேரன் செங்குட்டுவன் வைத்தான். வஞ்சி வஞ்சியின் புறமதிற்புறத்தே கடவுளர் கோயிலும் வேதிகையும் (திண்ணை), சாலையும், அழகிய பூஞ்சோலை யும், குளமும் நெருங்கி இருந்தன. ஆண்டு நற்றவம் புரிந்த முனிவரும், மறைநூல் பயின்று அதன்படி ஒழுகும் . அறவோரும், அறநெறி கடைப்பிடித்த பண்டைநுாற் பயிற்சி மிக்க புலவரும் நிறைந்து விளங்கினர். மேலும் அழகிய கொடி என்னும் பெயரான் அமைந்த பூ அல்லாத வஞ்சி என்னும் பெயரமைந்த இவ்வஞ்சிமாநகரம் எழில் மிகுந்த நகரமாகத் துலங்கியது." இவ்வாறு செங்குட்டுவனும் வஞ்சியும் மணிமேகலைக் காப்பியத்துள் குறிக்கப் பெற்றுள்ளனர். 1. வஞ்சிமாநகர் புக்க காகை: 62:94.